
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் கே.ஜி.எப் படம் இரண்டு பாகங்களாக உருவாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கே.ஜி.எப் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கன்னட சினிமா மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் படம் வசூல் குவித்துள்ளது.
கன்னடத்தில் ரூ.200 கோடி வசூலை தாண்டிய முதல் படம் என்ற பெருமை கே.ஜி.எப் படத்திற்கு கிடைத்துள்ளது.
இந்த படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிட்டார்.
கோலார் தங்க சுரங்கத்தில் பல காலமாக இருந்து வந்த அடிமை முறையை வெளிப்படுத்தும் விதமாக இப்படம் அமைந்திருந்தது.
தென்னிந்திய வரலாற்று படங்களில் கே.ஜி.எப் ரசிகர்கள் வரவேற்பிலும், வசூலிலும் புதிய சாதனை படைத்தது.
படத்தின் இரண்டாம் பாகம் பரபரப்பாக நடந்து வருகிறது. சஞ்சய் தத் முக்கிய வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.
