அரசியல் கட்சி பெயரில் ரஹ்மானுக்கு கடிதம் எழுதிய தயாரிப்பாளர்

39 Views

 

இசை நிகழ்ச்சியில் பாடல் பாடுவதற்கு முன் படத் தயாரிப்பாளர் பெயரையும், பட நிறுவனத்தின் பெயரையும் சொல்லுங்கள் என தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் தான் சார்ந்த கட்சி பெயரில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கடிதம் எழுதியது சர்ச்சை ஆகியுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இப்போது ஓய்வு பெற்ற நீதியரசர் கண்காணிப்பில் செயல்படுகிறது.
மேலும், திரைத்துறையில் உள்ள பிரபல தயாரிப்பாளர்கள் சிலரை நியமித்து நிர்வாக குழுவை அமைத்து உள்ளது தமிழக அரசு.

இந்த கமிட்டி பல அதிரடிகளை செய்து வருகிறது.

இதில் உறுப்பினர் ஆக இருக்கும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் தான் சார்ந்த கட்சி பெயரில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒரு கடிதம் எழுத அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சென்னையில் இன்று நடைபெற உள்ள ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பாடல் பாடுவதற்கு முன் தயாரிப்பாளர் பெயரும், பட நிறுவன பெயரும் சொல்ல வேண்டும் என அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார் ஜே.எஸ்.கே.

இந்த சூழலில் ஏ.ஆர்.ரஹ்மானை அரசியல் கட்சி பெயரில் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.மிரட்டி இருக்கிறார் என்று பதிவின் நோக்கத்தை வேறுபக்கம் திருப்பும் முயற்சியும் நடக்கத்தான் செய்தது.

அதே நேரம் தயாரிப்பாளர் கவுன்சில் வேண்டுகோளை ஏற்காமல் ஏதாவது காரணம் சொல்லி எஸ்கேப் ஆக திட்டமிட்டு தொகுப்பாளர் இல்லாமல் நிகழ்ச்சி நடத்த ரஹ்மான் முடிவு செய்து இருக்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *