வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: A.R.Rahman

கனடாவில்  ரஹ்மானை கவுரவிக்கும்  வகையில் ஏ.ஆர். ரஹ்மான் தெரு!

கனடாவில் ரஹ்மானை கவுரவிக்கும் வகையில் ஏ.ஆர். ரஹ்மான் தெரு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
ரோஜா படத்தில் இடம் பெற்ற 'சின்ன சின்ன ஆசை' பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து 'ஹாலிவுட்' வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான். தற்போது, இவரின் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், இப்படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவிக்கும் வகையில், கனடாவின் மார்க்கம் என்ற நகரத்தில் உள்ள ஒரு தெருவிற்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்....
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை துபாயில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை துபாயில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
  துபாய் சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.     இந்த சந்திப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் துபாய் எக்ஸ்போ 2022 பார்வையிடச் சென்ற என்னை நண்பர் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ஸ்டூடியோவுக்கு அழைத்து, தான் தயாரித்துள்ள 'மூப்பில்லா தமிழே தாயே' ஆல்பத்தை காண்பித்தார். தமிழுக்கும் இசைக்கும் உலகில் எல்லை இல்லை!" என மாண்புமிகு முதலமைச்சர் பாராட்டியுள்ளார். அதோடு ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டியோவில் இருக்கும் படங்களையும் வெளியிட்டிருக்கிறார். அவருடன் உதய் நிதி எம்.எல்.ஏ., துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதய் நிதி ஆகியோரும் உடனிருந்ததனர். ...
6.75 லட்சத்துக்கு ஏலம் போன ஏ.ஆர்.ரஹ்மான் ஆடை!

6.75 லட்சத்துக்கு ஏலம் போன ஏ.ஆர்.ரஹ்மான் ஆடை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
  நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்திய ஆடை ஒன்று, 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. மேற்கத்திய இசையை பாமர மக்களுக்கு கொண்டுச் சென்றவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். தனது துள்ளல் இசையால் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தவர். அமைதியான சுபாவம் கொண்ட ரஹ்மான், தனது இசையால் மற்றவர்களை பேச வைத்தவர். 1992-ம் ஆண்டு ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான், தொடர்ந்து இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழி படங்களுக்கும் இசையமைத்தார். சர்வதேச அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை, அதுவும் 2 விருதுகளை வென்று உலக அரங்கில் தமிழை தலை நிமிரச் செய்தார். இந்நிலையில் ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளையின் 28-ம் ஆண்டு நிறுவன தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தம...
நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன் – ஏ.ஆர்.ரகுமான்!

நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன் – ஏ.ஆர்.ரகுமான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன் - ஏ.ஆர்.ரகுமான்! இசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருதையும் வென்றார். தற்போது இன்னொரு பரிமாணமாக ‘99 சாங்க்ஸ்' என்ற படத்துக்கு கதாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார். அடுத்து படம் இயக்கவும் சினிமாவில் நடிக்கவும் முடிவு செய்து இருப்பதாக தகவல் பரவி உள்ளது. இதற்கு பதில் அளித்து ஏ.ஆர்.ரகுமான் கூறும்போது, ''இயக்குனராக மாறுவதற்கு இன்னும் பல காலம் ஆகலாம். அதற்கு இப்போது எனக்கு நேரமும் இல்லை. ஆனால் படம் தயாரிப்பதும், கதை எழுதுவதும் எளிமையாக உள்ளது. நான் நிறைய கதைகள் எழுதி வைத்து இருக்கிறேன். தற்போது எனது கதையில் தயாராகி உள்ள 99 சாங்ஸ் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த படத்துக்கு கதை எழுதுவது பற்றிய முடிவை எடுப்பேன். சினிமாவில் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். எனக்கென்று சொந்த உலகம் இருக்கிறது. அதில் இரு...
ஏ.ஆர்.ரகுமானுடன் கூட்டணி அமைத்த பார்த்திபன்!

ஏ.ஆர்.ரகுமானுடன் கூட்டணி அமைத்த பார்த்திபன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஏ.ஆர்.ரகுமானுடன் கூட்டணி அமைத்த பார்த்திபன்! வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் முதன்மையானவர் பார்த்திபன். புதிய பாதை, பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ஹவுஸ்புல், வெற்றிக்கொடி கட்டு, இவன், அழகி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஒத்த செருப்பு என பார்த்திபனின் அனைத்து படங்களுக்கும் வரவேற்பு கிடைத்தன. குறிப்பாக கடந்த 2019-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு படம், தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தியது என்றே சொல்லலாம். ஏனெனில் இப்படத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடித்திருந்தார். இப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. இவ்வாறு சினிமாவில் பல்வேறு புதுமைகளை செய்யும் பார்த்திபன், அடுத்ததாக இரவின் நிழல் என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை ஒரே ஷாட்டில் எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். அவரும் இப்படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இ...
அரசியல் கட்சி பெயரில் ரஹ்மானுக்கு கடிதம் எழுதிய தயாரிப்பாளர்

அரசியல் கட்சி பெயரில் ரஹ்மானுக்கு கடிதம் எழுதிய தயாரிப்பாளர்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இசை நிகழ்ச்சியில் பாடல் பாடுவதற்கு முன் படத் தயாரிப்பாளர் பெயரையும், பட நிறுவனத்தின் பெயரையும் சொல்லுங்கள் என தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் தான் சார்ந்த கட்சி பெயரில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கடிதம் எழுதியது சர்ச்சை ஆகியுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இப்போது ஓய்வு பெற்ற நீதியரசர் கண்காணிப்பில் செயல்படுகிறது. மேலும், திரைத்துறையில் உள்ள பிரபல தயாரிப்பாளர்கள் சிலரை நியமித்து நிர்வாக குழுவை அமைத்து உள்ளது தமிழக அரசு. இந்த கமிட்டி பல அதிரடிகளை செய்து வருகிறது. இதில் உறுப்பினர் ஆக இருக்கும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் தான் சார்ந்த கட்சி பெயரில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒரு கடிதம் எழுத அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சென்னையில் இன்று நடைபெற உள்ள ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பாடல் பாடுவதற்கு முன் தயாரிப்பாளர் பெயரும், பட நிறுவன பெயரும் சொல்ல வேண்டும் என ...
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சிக்கு செக் வைத்த தயாரிப்பாளர் சங்க கமிட்டி..!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சிக்கு செக் வைத்த தயாரிப்பாளர் சங்க கமிட்டி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சிக்கு செக் வைத்த தயாரிப்பாளர் சங்க கமிட்டி..! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இப்போது தமிழக அரசின் கண்காணிப்பில் செயல்படுகிறது. ஓய்வு பெற்ற நீதியரசர் சேகர் தலைமையில் நிர்வாக கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கமிட்டியின் சமீபத்திய பல அதிரடி நடவடிக்கைகள் தமிழ் திரையுலகில் பலராலும் உன்னிப்பாக கவனிக்கும் செயலாக மாறி உள்ளது. சேலம் நகர தியேட்டர் சிண்டிகேட் தொடங்கி ரேடியோவில் பாட்டு போடும் உரிமை வரைக்கும் தயாரிப்பாளர் நலன் சார்ந்து பல அதிரடிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக விருது விழாக்களில் பயன்படுத்தப்படும் காட்சிகளுக்கு தயாரிப்பாளர் அனுமதி பெறவேண்டும் அவர்களை அழைத்து கவுரவபடுத்த வேண்டும் எனற கோரிக்கை உடனடியாக அமலுக்கு வந்தது. அதே போல ரேடியோவில் பாடல் ஒலிபரப்பும் போது அந்த பட தலைப்பை சொல்லும் போது தயாரிப்பாளர...
ரஜினியின் 2.0 படம் சீனாவில் ஜூலை 12ல் 56ஆயிரம் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ்…

ரஜினியின் 2.0 படம் சீனாவில் ஜூலை 12ல் 56ஆயிரம் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ரஜினியின் 2.0 படம் சீனாவில் ஜூலை 12ல் 56ஆயிரம் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ்... ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்த படம் 2.0. ரஜினி ஜோடியாக எமி ஜாக்சன் நடித்திருப்பார். அக்‌ஷய்குமார் வில்லனாக நடித்த இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் தமிழ் இந்தி மொழியில் ரிலீஸ் ஆனது. ரஜினிக்கு உலகம் முழுதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜப்பான், சீனாவில் ரஜினிக்கு தனி மவுசு உண்டு.   https://twitter.com/arrahman/status/1135864311702626307?s=19 அந்த வகையில் 2.0 படத்தை சீன மொழியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகள் முடிந்து லைகா நிறுவனம் ஜூலை 12ம் தேதி சீனாவில் படத்தை ரிலீஸ் செய்கிறது. சீனா முழுதும் சுமார் 56 ஆயிரம் ஸ்கிரீன்களில் 2.0 ரிலீஸ் ஆகிறது. முன்னதாக ஜூன் 28ம் தேதி பிரமாண்டமான பிரிமியர் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்...
ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டியோவில் விஜய்யின்  தளபதி63 பட பாடலை கேட்ட அட்லி… வைரலாகும் படம்

ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டியோவில் விஜய்யின் தளபதி63 பட பாடலை கேட்ட அட்லி… வைரலாகும் படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தளபதி63 படத்தின் 2 பாடல் முடிந்து அந்த பாடலை இயக்குனர் அட்லிக்கு போட்டு காட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். விஜய் இரு வேஷங்களில் நடித்து வரும் தளபதி 63 படத்தின் பெயர் விஜய் பிறந்த நாளான வரும் 22ம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில்... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக 2 பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் ஆடியோ வெளியாகலாம் என கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருவது போல படத்தின் பாடல் இசை சேர்ப்பு பணியும் ஏ.ஆர்.ரஹ்மான் விறுவிறுப்பாக செய்து வருகிறார். படத்தின் முதல் பாடலை இயக்குனர் அட்லிக்கு தனது ஸ்டியோவில் ரஹ்மான் போட்டு காட்டியிருக்கிறார்.   https://twitter.com/arrahman/status/1135993191449022464?s=19 இயக்குனர் அட்லி தனது ஸ்டுடியோவில் அமர்ந்திருக்கும் படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் ரஹ்மான் பதிவிட்டு ...
அஜீத்துடன் இணைகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்..!

அஜீத்துடன் இணைகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜீத்துடன் இணைகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்..!? அஜீத் குமரின் அடுத்த படத்தை தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்கப் போவதாகவும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கப் போவதாகவும் தகவல்கள் கோலிவுட்டை பரபரக்கிறது. இதற்கிடையில் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிக்கும் படத்தில் இசையை ஏ.ஆர்.ரஹ்மான் வசம் ஒப்படைக்கலாம் என்று தயாரிப்பு தரப்பு தனது விருப்பத்தை அஜீத்குமாரிடம் தெரிவித்துள்ளது. அதே நேரம் இயக்குனர் வினோத் சாய்ஸ் ஜிப்ரான். இவர் ஏற்கனவே தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வினோத்துடன் இணைந்து ஹிட் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன் சாய்ஸ் ஜிப்ரான் என்பதையும் அஜீத் கவனத்திற்கு வினோத் கொண்டு போய் விட்டார். இனி முடிவு அஜீத் கையில் தான்... அஜீத் தேர்வு ஏ.ஆர்.ரஹ்மான் ஆக இருக்கும் என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம்.  ...