
அஜீத்துடன் இணைகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்..!?
அஜீத் குமரின் அடுத்த படத்தை தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்கப் போவதாகவும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கப் போவதாகவும் தகவல்கள் கோலிவுட்டை பரபரக்கிறது.

இதற்கிடையில்
வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிக்கும் படத்தில் இசையை ஏ.ஆர்.ரஹ்மான் வசம் ஒப்படைக்கலாம் என்று தயாரிப்பு தரப்பு தனது விருப்பத்தை அஜீத்குமாரிடம் தெரிவித்துள்ளது.
அதே நேரம் இயக்குனர் வினோத் சாய்ஸ் ஜிப்ரான். இவர் ஏற்கனவே தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வினோத்துடன் இணைந்து ஹிட் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் சாய்ஸ் ஜிப்ரான் என்பதையும் அஜீத் கவனத்திற்கு வினோத் கொண்டு போய் விட்டார்.
இனி முடிவு அஜீத் கையில் தான்… அஜீத் தேர்வு ஏ.ஆர்.ரஹ்மான் ஆக இருக்கும் என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம்.

566 Views
