வியாழக்கிழமை, மே 16
Shadow

கருத்து கணிப்புகளில் கூடாரம் காலியாகும் அதிமுக… நாற்காலி பிடிக்கும் திமுக..!

 

நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்தது.

குறிப்பாக தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி இருவரின் மறைவுக்கு பின் நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் என்பதால் அதிகம் கவனம் பெற்றது.

திமுக ஸ்டாலின் தலைமையில் ஒரு கூட்டணியையும், அதிமுக பாஜகவுடன் ஒரு கூட்டணியும், தினகரனின் அமமுக தனியாகவும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் தனியாகவும், நாம் தமிழர் சீமான் தனியாகவும் களத்தில் நின்றன.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை 23ம் தேதி நடை பெற உள்ளது.

இந்த சூழலில் நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை நிலவுவதால் மாநில கட்சிகள் அதிக அளவில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

அதோடு மக்கள் விரோத நடவடிக்கைகள் காரணமாக மத்தியில் இருந்த மோடி அரசுக்கு இணக்கமாக செயல்பட்டதோடு, மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என ஜெயலலிதா எதிர்த்த பல திட்டங்களை அமல் படுத்தியது போன்ற பல காரணங்களால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு மக்கள் நம்பிக்கையை முழுமையாக இழந்தது.

இதன் காரணமாக திமுகவின் செல்வாக்கு உயர்ந்தது. நடந்து முடிந்த தேர்தலில் யாருக்கு எத்தனை இடங்களில் கிடைக்கும் எனற முன் கருத்து கணிப்புகள் பலவற்றிலும் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என தெரிகிறது.

ஆளும் அதிமுக ஒரு சில இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடியும் எனவும் அந்த வெற்றியும் அந்த வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக தான் கிடைக்கும் என கருத்து கணிப்புகள் சொல்கிறது.

மாநிலத்தில் எப்படி ஆளும் அதிமுகவுக்கு வீழ்ச்சியோ அதே போல மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு பெரும் சரிவு கிடைக்குமாம்.

ஆக வெளியான கருத்து கணிப்புகள் அடிப்படையில் மாநில கட்சிகள் அதிக அளவில் வெற்றி பெற்று மத்திய ஆட்சியை முடிவு செய்வார்கள் என உறுதியாகிறது.

தமிழகத்தில் ஆளும் அதிமுக தேர்தலில் மண்ணை கவ்வும் அதே நேரம் ஆட்சியையும் பறி கொடுத்து வீட்டுக்கு போகும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுகவும், பல இடங்களில் தினகரனின் அமமுகவும் தான் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதன் காரணமாக ஆட்சியையும் அதிமுக பறி கொடுக்கும் மீண்டும் திமுக ஆட்சியை பிடிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக திமுக தொண்டர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

379 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன