புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

Tag: ஸ்டாலின்

அடுத்து திமுக ஆட்சிதான் தேர்தல் பணிக்கு தயாராகுங்கள் – ஸ்டாலின் பேச்சு

அடுத்து திமுக ஆட்சிதான் தேர்தல் பணிக்கு தயாராகுங்கள் – ஸ்டாலின் பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. தொ.மு.ச. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 9 அடி உயர முழுஉருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது:- மத்திய-மாநில அரசுகள் தொழிலாளர்களின் துரோக அரசுகளாக உள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மட்டுமே 2 அரசுகளும் செயல்படுகிறது. தொழிலாளர்களுக்காக பிரதமர் அறிவிக்கும் பல கோடி ரூபாய் திட்டங்கள் வாக்குறுதிகளாகவே உள்ளது. நானும் விவசாயிதான் என்று கூறும் தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் 8 வழிச்சாலை போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்தவர். நீட் தேர்வு காரணமாக இறந்த மாணவர்களின் மரணம் தற்கொலை அல்ல. அது மத்திய-மாநில அரசுகள் நடத்திய கொலைகள். ஆனால், இந்த தற்கொலைக்கு காரணம் தி.மு.க.தான் என்று சட்டசபையில் ம...
நீட் தேர்வை தடுத்ததே திமுக தான் சட்டசபையில் ஸ்டாலின் விளக்கம்!

நீட் தேர்வை தடுத்ததே திமுக தான் சட்டசபையில் ஸ்டாலின் விளக்கம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு இவ்வளவு பெரிய பிரச்சினையாக காரணம் தி.மு.க. அரசுதான் என்று குற்றம் சாட்டினார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அப்போது காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது என முதலமைச்சர் பழனிசாமி ஆவேசத்துடன் தெரிவித்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சரின் குற்றச்சாட்டிற்கு தி.மு.க. தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இது குறித்து விளக்கம் அறித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வை கொண்டு வந்தது பா.ஜ.க. அரசு, அதனை ஆதரித்தது அ.தி.மு.க. அரசு. மாணவர்கள் தற்கொலைக்கு அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும்தான் காரணமே தவிர, தி.மு.க. அல்ல. 2010-ல் நீட் தேர்வு வரவில்லை. இந்திய மருத்துவ...
பொதுக்குழு முடிந்ததும் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் உடன் புதிய நிர்வாகிகள் மலரஞ்சலி!

பொதுக்குழு முடிந்ததும் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் உடன் புதிய நிர்வாகிகள் மலரஞ்சலி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுக பொதுக்குழு கூட்டம் முடிவடைந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சென்னை மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். துணை பொதுச்செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆ.ராசா, பொன்முடி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பொன்முடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.  ...
ரேஷன் கார்டுக்கு 5 ஆயிரம், உயிரிழந்தால் 1கோடி வழங்க வேண்டும் திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்!

ரேஷன் கார்டுக்கு 5 ஆயிரம், உயிரிழந்தால் 1கோடி வழங்க வேண்டும் திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா வைரஸ் பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து விவாதிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்தது. இந்த கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்தது. மேலும் காணொளி காட்சி மூலம் நடத்திக் கொள்ளலாம் என அறிவித்தது. இதையடுத்து கொரானா வைரஸ் தொடர்பாக மத்திய - மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கொரானா மற்றும் ஊரடங்கால் பரிதவிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் மற்றும் நிவாரண உதவிகள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலார் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றன...
அதிகம் பாதித்த தமிழகத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கி மோடி செய்யும் கொரானா அரசியல் – ஸ்டாலின் அறிக்கை

அதிகம் பாதித்த தமிழகத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கி மோடி செய்யும் கொரானா அரசியல் – ஸ்டாலின் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பாதிப்பு அதிகரித்த தமிழகத்திற்குக் குறைவான நிதி ஏன்? இதுதான் மத்திய அரசின் கொரோனா அரசியல் என ஸ்டாலின் விமர்சனம்! கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழ்நாட்டிற்கு குறைவான நிதியை ஒதுக்கி இருப்பது மத்திய அரசின் கொரோனா அரசியல் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மராட்டியத்திற்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டில் தான் அதிகம் என்பதை சுட்டிக் காட்டி இருக்கிறார்.பாதிப்பு குறைவாக உள்ள உத்தரப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட தமிழ்நாட்டிற்கு குறைவான நிதி ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 234 பேர் பாதிக்கப்பட்ட உத்தரபிரதேசத்திற்கு ரூ.966 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். அதோடு பாஜக ஆளாத மாநிலம் என்பதால் தமிழ்நாட்டிற...
நிவாரண நிதி அறிவிக்காத திரையுலகம்… ஸ்டாலின் வழியை பின்பற்றுவாரா ரஜினி

நிவாரண நிதி அறிவிக்காத திரையுலகம்… ஸ்டாலின் வழியை பின்பற்றுவாரா ரஜினி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    நிவாரண நிதி அறிவிக்காத திரையுலகம்... ஸ்டாலின் வழியை பின்பற்றுவாரா ரஜினி! உயிர்க்கொல்லி வைரஸ் ஆன கொரானாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரானா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு இடங்களில் சிறப்பு தனிமைபடுத்தும் மையங்கள் அமைக்க அரங்குகள், வீடுகளை கொடுங்கள் என அரசு அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து கொரானா சிறப்பு மருத்துவமனைக்கு கலைஞர் அரங்கத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் என மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் அனுப்பினார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்த கடிதத்தை முன்னாள் மேயர் சுப்பிரமணியம் கொண்டு போய் கொடுத்தார். இதே போல விழுப்புரம், திருச்சி நகரங்களில் உள்ள கலைஞர் அரங்கங்களையும் பயன்படுத்தி கொள்ள திமுக அறிவித்து உள்ளது. திமுக தரப்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ் மக்களின் ...
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன கமல்!

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன கமல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  திமுக தலைவர் ஸ்டாலின் ஞாயிறன்று தனது 67-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஆனால் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் உடல்நலக்குறைவு காரணமாக தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என்று முன்னரே அறிவித்து விட்டார். இந்நிலையில் மக்களுக்காக உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலிக்கட்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அன்பு சகோதரர் திரு. @mkstalin அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலித்திட "என் மனமார்ந்த வாழ்த்துக்கள்"...
திமுகவில் அப்பா ஸ்டாலின் வகித்த பதவியை அடைந்த மகன் உதயநிதி..!

திமுகவில் அப்பா ஸ்டாலின் வகித்த பதவியை அடைந்த மகன் உதயநிதி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுகவில் அப்பா ஸ்டாலின் வகித்த பதவியை அடைந்த மகன் உதயநிதி..! திமுகவின் புதிய இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டு இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் மகனும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனருமான உதயநிதி ஸ்டாலின் தி.மு.கவின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்படுவார் என நீண்டகாலமாகவே பேச்சுகள் அடிபட்டுவந்த நிலையில், இன்று அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவியை இதுவரை வகித்து வந்த வெள்ளக்கோயில் சாமிநாதன் தேர்தல் முடிவுக்கு பின் திடீரென பதவியில் இருந்து விலகினார். அதையடுத்து அவர் பதவிக்கு உதயநிதி நியமிக்க படலாம் என்ற கருத்து நிலவியது. இப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் அப்பா ஸ்டாலின் வகித்து வந்த பதவியை மகன் உதயநிதி ஸ்டாலின் பெற்று இருக்கிறார். த...
தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி கருணாநிதி – பிறந்த நாளில் ஸ்டாலின் புகழாரம்

தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி கருணாநிதி – பிறந்த நாளில் ஸ்டாலின் புகழாரம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கருணாநிதியின் 96-வது பிறந்த நாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் வந்த முதல் பிறந்த நாள் என்பதால் தொண்டர்கள் பல இடங்களிலும் வழக்கத்தை விட உற்சாகமாக கருணாநிதி பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி; இன்று நிரந்தர உயிர்ப்புச் சக்தி! தலைவரே! உங்கள் பிறந்தநாள், இன்பத் தமிழினத்தின் பிறந்தநாள். நீங்கள் இருந்து ...