திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

நீட் தேர்வை தடுத்ததே திமுக தான் சட்டசபையில் ஸ்டாலின் விளக்கம்!

 

 

தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு இவ்வளவு பெரிய பிரச்சினையாக காரணம் தி.மு.க. அரசுதான் என்று குற்றம் சாட்டினார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அப்போது காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது என முதலமைச்சர் பழனிசாமி ஆவேசத்துடன் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து முதலமைச்சரின் குற்றச்சாட்டிற்கு தி.மு.க. தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இது குறித்து விளக்கம் அறித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வை கொண்டு வந்தது பா.ஜ.க. அரசு, அதனை ஆதரித்தது அ.தி.மு.க. அரசு. மாணவர்கள் தற்கொலைக்கு அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும்தான் காரணமே தவிர, தி.மு.க. அல்ல.
2010-ல் நீட் தேர்வு வரவில்லை. இந்திய மருத்துவக் கழகம் அப்படியொரு விதிமுறைகளை வகுத்தது. அப்போதைய தி.மு.க. அரசு உயர்நீதிமன்றத்தை நாடி தடையுத்தரவு வாங்கியது. தி.மு.க. அரசுதான் நீட் தேர்வை தடுத்து நிறுத்தியது” என தெரிவித்துள்ளார்.
239 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன