
திமுக தலைவர் ஸ்டாலின் ஞாயிறன்று தனது 67-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஆனால் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் உடல்நலக்குறைவு காரணமாக தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என்று முன்னரே அறிவித்து விட்டார்.
இந்நிலையில் மக்களுக்காக உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலிக்கட்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
அன்பு சகோதரர் திரு. @mkstalin அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலித்திட “என் மனமார்ந்த வாழ்த்துக்கள்”
501 Views
