வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

திமுகவில் அப்பா ஸ்டாலின் வகித்த பதவியை அடைந்த மகன் உதயநிதி..!

 

திமுகவில் அப்பா ஸ்டாலின் வகித்த பதவியை அடைந்த மகன் உதயநிதி..!

திமுகவின் புதிய இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டு இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் மகனும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனருமான உதயநிதி ஸ்டாலின் தி.மு.கவின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்படுவார் என நீண்டகாலமாகவே பேச்சுகள் அடிபட்டுவந்த நிலையில், இன்று அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பதவியை இதுவரை வகித்து வந்த வெள்ளக்கோயில் சாமிநாதன் தேர்தல் முடிவுக்கு பின் திடீரென பதவியில் இருந்து விலகினார்.

அதையடுத்து அவர் பதவிக்கு உதயநிதி நியமிக்க படலாம் என்ற கருத்து நிலவியது. இப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இதன் மூலம் அப்பா ஸ்டாலின் வகித்து வந்த பதவியை மகன் உதயநிதி ஸ்டாலின் பெற்று இருக்கிறார். திமுகவில் இளைஞர் அணி எனப்து மிக முக்கியமான பதவி. உதயநிதி தன் பதவியை எப்படி எடுத்து செல்லப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

829 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன