வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

நிவாரண நிதி அறிவிக்காத திரையுலகம்… ஸ்டாலின் வழியை பின்பற்றுவாரா ரஜினி

 

 

நிவாரண நிதி அறிவிக்காத திரையுலகம்… ஸ்டாலின் வழியை பின்பற்றுவாரா ரஜினி!

உயிர்க்கொல்லி வைரஸ் ஆன கொரானாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

கொரானா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு இடங்களில் சிறப்பு தனிமைபடுத்தும் மையங்கள் அமைக்க அரங்குகள், வீடுகளை கொடுங்கள் என அரசு அறிவித்திருந்தது.

இதை தொடர்ந்து கொரானா சிறப்பு மருத்துவமனைக்கு கலைஞர் அரங்கத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் என மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் அனுப்பினார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இந்த கடிதத்தை முன்னாள் மேயர் சுப்பிரமணியம் கொண்டு போய் கொடுத்தார். இதே போல விழுப்புரம், திருச்சி நகரங்களில் உள்ள கலைஞர் அரங்கங்களையும் பயன்படுத்தி கொள்ள திமுக அறிவித்து உள்ளது.

திமுக தரப்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ் மக்களின் நன்மைக்காக விரைவில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து உள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது ராகவேந்திரா மண்டபத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வழியில் கொரானா சிறப்பு மருத்துவமனைக்கு தற்காலிகமாக அறிவிப்பாரா ரஜினி என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

அதோடு கொரானா தடுப்பு பணிகளுக்கான முதல்வர் நிவாரண நிதியாக இதுவரை ரஜினிகாந்த் தரப்பில் ஒரு ரூபாயும் அறிவிக்கப்படவில்லை. ரஜினி மட்டுமல்லாமல் கமல், விஜய், அஜீத் என முன்னணி திரையுலக பிரபலங்களில் சிவகார்த்திகேயனை தவிர யாரும் ஒரு பைசா கூட இந்த நிமிடம் வரை அறிவிக்கவில்லை.

நடிகர் சிவகார்த்திகேயன் மட்டும் ரூ.25 லட்சம் முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்திருக்கிறார்.

453 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன