’அயலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!
இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீதி சிங் நடிப்பில் 24ஏ.எம். தயாரிப்பில் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அயலான்’. இதன் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் முதலாவதாக கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் எக்ஸிகியூடிவ் புரொடியூசர் சவுந்தர் பைரவி பேசியதாவது, “இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள இயக்குநர் ரவிக்குமார், நடிகர் சிவகார்த்திகேயன், படக்குழுவினர் அனைவரையும் வரவேற்கிறோம்” என்றார்.
நடிகர் பாலசரவணன் பேசியதாவது, “இவ்வளவு நாள் எதற்காக காத்திருந்தோமோ அது நடக்கிறது. இந்தப் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் ரவிக்குமாருக்கும், சிவகார்த்திகேயன் பிரதருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி”.
பாடலாசிரியர் விவேக் பேசியதாவது, “ஒருத்தருக்கு வெற்றி கஷ்டப்பட்டு கிடைக்கும்போதுதான்...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தனியார் பள்ளி ஒன்றில் 15 வயது மாணவி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பரமக்குடி வைகை நகர் பகுதியை சேர்ந்தவர் சிகாமணி (வயது 44). இவர் பரமக்குடி நகராட்சி அ.தி.மு.க.கவுன்சிலராக உள்ளார்.
இவரும், அவரது நண்பரான மாதவன் நகரை சேர்ந்த ராஜா முகமதுவும் (36) சேர்ந்து காரில் அந்த மாணவியை ஏற்றி சென்றுள்ளனர்.
பின்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை செல்லும் வழியில் உள்ள ஒரு மகாலுக்கு மாணவியை அழைத்து சென்றனர்.
அங்கு வைத்து அந்த மாணவியை சிகாமணி, ராஜா முகமது மற்றும் பரமக்குடி புது நகரை சேர்ந்த பிரபாகரன் (42) ஆகிய 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுபோன்று பலமுறை அந்த மாணவியை இவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும், சிகாமணி அலுவலகத்தில் பணியாற்றி வரும் பரமக்குடி புது நகரை சேர்ந்தவர்களான கயல்விழி (45), அன்னலட்சுமி என...
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கடந்த 11-ந்தேதி ஏற்பட்ட கலவரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 400 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 15 பேர் அன்றைய தினமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக மற்றவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
மோதல் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வைத்து கலவரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் யார்? யார்? என்பதை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இதன்படி 48 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இவர்கள் அனைவரும் தேனி, தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்கள் அனைவரும் நாளையும், நாளை மறுநாளும் நேரில் ஆஜராக வேண்டும் என்று போல...
அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியையும் வகித்து வருகிறார். பொதுக்குழு கூட்டங்களில் பொருளாளர்தான் கட்சியின் வரவு-செலவு விவரங்களை வாசித்து தாக்கல் செய்வார்.
அதற்கு பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும். அதுதான் கட்சியின் அதிகாரப்பூர்வ வரவு-செலவு கணக்காக எடுத்துக்கொள்ளப்படும்.
தற்போது எடப்பாடி பழனிசாமி அணியுடன் உரசல் ஏற்பட்டு இருப்பதால் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. என்றாலும் அ.தி.மு.க.வில் பொருளாளர் என்ற அடிப்படையில் அவரிடம் இன்று வரவு-செலவு கணக்குகள் கொடுக்கப்பட்டன.
நாளை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் வாசிப்பதற்காக இந்த வரவு-செலவு கணக்கு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கூட்டத்திற்கு வராதபட்சத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறப்படுகி...