
துபாய் சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்த சந்திப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் துபாய் எக்ஸ்போ 2022 பார்வையிடச் சென்ற என்னை நண்பர் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ஸ்டூடியோவுக்கு அழைத்து,
தான் தயாரித்துள்ள ‘மூப்பில்லா தமிழே தாயே’ ஆல்பத்தை காண்பித்தார். தமிழுக்கும் இசைக்கும் உலகில் எல்லை இல்லை!” என மாண்புமிகு முதலமைச்சர் பாராட்டியுள்ளார்.

அதோடு ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டியோவில் இருக்கும் படங்களையும் வெளியிட்டிருக்கிறார். அவருடன் உதய் நிதி எம்.எல்.ஏ., துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதய் நிதி ஆகியோரும் உடனிருந்ததனர்.

602 Views
