திங்கட்கிழமை, நவம்பர் 2
Shadow

ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டியோவில் விஜய்யின் தளபதி63 பட பாடலை கேட்ட அட்லி… வைரலாகும் படம்

 

தளபதி63 படத்தின் 2 பாடல் முடிந்து அந்த பாடலை இயக்குனர் அட்லிக்கு போட்டு காட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

விஜய் இரு வேஷங்களில் நடித்து வரும் தளபதி 63 படத்தின் பெயர் விஜய் பிறந்த நாளான வரும் 22ம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில்…

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக 2 பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் ஆடியோ வெளியாகலாம் என கூறப்படுகிறது.

படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருவது போல படத்தின் பாடல் இசை சேர்ப்பு பணியும் ஏ.ஆர்.ரஹ்மான் விறுவிறுப்பாக செய்து வருகிறார்.

படத்தின் முதல் பாடலை இயக்குனர் அட்லிக்கு தனது ஸ்டியோவில் ரஹ்மான் போட்டு காட்டியிருக்கிறார்.

 

இயக்குனர் அட்லி தனது ஸ்டுடியோவில் அமர்ந்திருக்கும் படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் ரஹ்மான் பதிவிட்டு தளபதி 63 படத்தின் முதல் பாடலை இயக்குனர் அட்லி கேட்டு ரசித்தார் எனபதை போல பதிவிட அந்த படம் வைரலாகிவருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன