திங்கட்கிழமை, நவம்பர் 2
Shadow

அஜீத்தின் “தல60” வில்லனா..? – போனி கபூர் சந்திப்பு ஏன் எஸ்.ஜே.சூர்யா சொன்ன ரகசியம்

 

அஜீத்தின் “தல60” வில்லனா..? – எஸ்.ஜே.சூர்யா சொன்ன ரகசியம்

நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்திலும், மகேஷ்பாபு நடித்த ‘ஸ்பைடர் திரைப்படத்திலும் வில்லனாக நடித்து கலக்கினார். இதனையடுத்து தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கவுள்ள ‘தல 60’ படத்திலும் அவர் வில்லனாக நடிக்கவிருப்பதாக ஒரு வதந்தி வேகமாக பரவி வருகிறது

மேலும் சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா அஜித்குமார் நடிக்கும், ‘தல 60’ படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரை எஸ்.ஜே.சூர்யா சந்தித்ததால் இந்த வதந்தி மேலும் வலுவானது. ஆனால் இந்த தகவலை எஸ்.ஜே.சூர்யா அடியோடு மறுத்துள்ளார்.

அதே நேரம் “”தயாரிப்பாளர் போனிகபூரை சந்தித்தது உண்மைதான் என்றும், ஆனால் தனது ‘மான்ஸ்டர் படத்தை அவர் பார்க்க வேண்டும் என்று விரும்பியதால் அவருக்காக சிறப்பு காட்சி ஏற்பாடு செய்வது குறித்து பேசியதாகவும், அப்போது மான்ஸ்டர் படத்தின் வெற்றிக்காக தனக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் எஸ்.ஜே.சூர்யா கூறியிருக்கிறார்.

அஜீத் நடிப்பில் மெகா ஹிட் அடித்த வாலியின் இயக்குனர் மீண்டும் நடிகராவது அஜீத்துடன் இணைவது புதுசாக இருக்கும். பார்ப்போம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன