
ரவியின் கோமாளி ரிலீசுக்கு குறுக்கே நிற்கும் திருச்சி தியேட்டர்ஸ்… கடுப்பாகும் கவுன்சில்… தூசி தட்டப்படும் திருட்டு விசிடி தியேட்டர் விவகாரம்..!
ஜெயம் ரவி நடிப்பில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் வரும் 15ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் கோமாளி.
இந்த படத்தை பிரதீப் இயக்கி இருக்கிறார். படத்தின் டீசர் வெளியான போது ரஜினியை நக்கல் அடித்திருக்கிறார்கள் என சர்ச்சை எழுந்தது. பின்னர் அந்த காட்சியை நீக்கிவிட தயாரிப்பாளர், இயக்குனர் ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்ததால் அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.
படத்தில் ரவி பல கெட்டப்பில் நடித்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேல் ரிலீஸ் செய்ய உள்ளார்.
இந்த நிலையில் இதே சக்தி பிலிம் பேக்டரி சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் எதிர்பாராத விதமாக பெரும் தோல்வியை சந்தித்தது.
படம் தயாரித்த வாங்கி வெளியிட்ட அனைவருக்கும் நஷ்டம் ஏற்பட்டது.
திருச்சி ஏரியாவில் படத்தை வாங்கி வெளியிட்டவர் நஷ்டத்தை திருப்பி தரவேண்டும் என சக்திபிலிம் பேக்டரி சக்திவேலை நெருக்கடி கொடுக்க சிக்கல் அதிகரித்தது.

மேலும் இந்த விவகாரத்தில் நேரடியாக தொடர்புடைய நபரை விட்டுவிட்டு படம் வினியோகம் செய்த சக்திவேலை திருச்சி தியேட்டர் அதிபர்கள் நெருக்கடி கொடுப்பது, அதோடு 15ம் தேதி திருச்சியில் படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என மிரட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த…
இப்போது விவகாரம் கவுன்சில் நிர்வாக குழு கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
கவுன்சில் தரப்பிலும் பலமுறை சமரச நடவடிக்கைகள் எடுத்தும் எதுவும் பலன் அளிக்க வில்லை.

இதையடுத்து கோமாளி படத்தை ரிலீஸ் செய்யும் விவகாரத்தில் எதுவாக இருந்தாலும் பேசி தீர்வு காண் வேண்டும். அதை விட்டு படத்தை ரிலீஸ் செய்யாமல் “ரெட்” மிரட்டல் விடுத்தால் தயாரிப்பாளர் கவுன்சில் அதை வேடிக்கை பார்க்காது. ஏற்கனவே திருச்சி தியேட்டர் மீது நிலுவையில் உள்ள திருட்டு விசிடி பதிவு வழக்கை மீண்டும் கையில் எடுத்து சட்ட நடவடிக்கை எடுக்கவும் கவுன்சில் தயங்காது என கவுன்சில் நிர்வாக குழு உறுப்பினர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் ஆடியோ வெளியிட திருச்சி தியேட்டர் அதிபர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.எடுத்து வரும் நடவடிக்கைக்கு பல தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் வரவேற்று உள்ளனர்.
எது எப்படியோ சிக்கல் தீர்ந்து திருச்சியில் வரும் 15ல் கோமாளி ரிலீஸ் ஆனால் போதும் என எதிர்பார்க்கிறது கோமாளி ரவியின் ரசிகர் கூட்டம்.
