ரவியின் கோமாளி படக்கதை திருட்டு கதையா? உதவி இயக்குனருக்கு அங்கீகார கடிதம் கொடுத்த எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ்..!

261 Views

 

ரவியின் கோமாளி படக்கதை திருட்டு கதையா? உதவி இயக்குனருக்கு அங்கீகார கடிதம் கொடுத்த எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ்..!

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கதை திருட்டு புகார் அதிகரித்த படி உள்ளது.

எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இயக்குனர் பாக்யராஜ் வந்த பின் பல அதிரடிகளை செய்தார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்க்கார் படக்கதையும் திருட்டுக்கதை என புகார் எழுந்த போது உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரனுக்கு எழுத்தாளர் சங்கம் கடிதம் கொடுக்க பரபரப்பு ஏற்பட்டது.

அதன் பின் பட ரிலீஸ் நேரத்தில் வருண் ராஜேந்திரன் பெயர் டைட்டிலுக்கு முன் போடப்பட்டது.
இப்போது அதே போல மீண்டும் ஒரு அதிரடியை இயக்குனர் பாக்யராஜ் சத்தமில்லாம்ல் செய்திருக்கிறார்.

ஜெயம் ரவி நடித்து வரும் படம் கோமாளி. இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் பெரும் செலவில் தயாரித்து இருக்கிறார்.

இந்த படத்தை பிரதீப் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த கதை தன்னுடையது என கிருஷ்ணமூர்த்தி என்ற உதவி இயக்குனர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை பாக்யராஜ் தலைமையிலான சங்க உறுப்பினர்கள் விசாரிக்க உண்மை உதவி இயக்குனர் பக்கம் இருப்பது தெரிந்ததால் கதை உதவி இயக்குனர் கிருஷ்ண மூர்த்திக்கு சொந்தமானதுதான் என எழுத்தாளர் சங்கத்தில் அங்கீகார கடிதம் கொடுத்து இருக்கிறார்கள்.

இதனால் கதை திருட்டு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாக்யராஜ் இந்தபட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உடன் நடிகர் சங்கத்தில் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அதோடு நல்ல நண்பர். அப்படி இருந்தும் தவறு இருப்பதை விசாரித்து கடிதம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் பாக்யராஜ் கை பேசிக்கு அழைக்கும் பலரும் அவரின் காலர் டியூனை கேட்டிருப்பார்கள் ” ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் ” என்று பாடல் வரிகள் வரும். அதற்கேற்றார் போல உதவி இயக்குனர் கனவுக்கு கை கொடுத்து இருக்கிறார் பாக்யராஜ்.

இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்படுமா… சிக்கலாகுமா கோமாளி யார் என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்து விடும்.

– கோடங்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =