முடிவுக்கு வந்த கோமாளி கதை திருட்டு புகார்… மீண்டும் ஜெயித்த பாக்யராஜ்…!

539 Views

 

முடிவுக்கு வந்த கோமாளி கதை திருட்டு புகார்… மீண்டும் ஜெயித்த பாக்யராஜ்…!

பாக்யராஜ் வெற்றி பெற்றாரா என படிப்பவர்களுக்கு இது நடிகர் சங்க தேர்தல் முடிவு நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பாகாது…

ஆனால் தனது சரியான அணுகுமுறை மூலம் மீண்டும் ஒரு உதவி இயக்குனரின் கதை திருட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அந்த உதவி இயக்குனருக்கு நியாயம் பெற்று கொடுத்திருக்கிறார் பாக்யராஜ்.

ஜெயம் ரவி இப்போது கோமாளி ரவியாக மாறி இருக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். பிரதீப் என்பவர் அறிமுக இயக்குனர் அறிமுகம் ஆகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என இயக்குனர் பார்த்திபனின் உதவி இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி எனபவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுக்க பிரச்சினை பெரிதானது. படம் வரும் 15ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

கதை திருட்டு புகாரை விசாரித்த எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் புகாரில் உண்மை இருப்பதால் உதவி இயக்குனர் கிருஷ்ண மூர்த்தியின் நியாயத்தை கோமாளி தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாக குழுவில் தெரிவித்தார்.
இதற்கிடையில்… இந்த விவகாரத்தில் சமரச பேச்சு நடத்தப்பட்டதில் ஒரு சுமூகமான தீர்வு ஏற்பட்டது.

அதன்படி, கோமாளி படம் தொடங்கும் முன்பு கதை தன்னுடையது என்று புகார் செய்த நடிகர்/இயக்குநர் பார்திபனின் உதவி இயக்குநர் *கிருஷ்ணமூர்த்தி* பெயரும், நன்றியும், வாழ்த்தும் தெரிவிப்பதாக படக்குழுவினர் ஒப்புக் கொண்டதால் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இந்த கதை திருட்டு பஞ்சாயத்தை முன்னின்று முடித்து வைத்த எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொறுப்பாளர் குழு உறுப்பினர்கள் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், டி.சிவா உள்ளிட்டவர்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து கொள்வதாக உதவி இயக்குநர் கிருஷ்ண மூர்த்தி தெரிவித்துள்ளார். –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =