வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் சமுத்திரகனி..!

 

 

கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் சமுத்திரகனி..!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன்2 படம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

இந்தியன் 2′ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இவர் பிளாஷ்பேக் காட்சியில் வர உள்ளதாகவும், சுதந்திரத்துக்கு முந்தைய காட்சியில் கமல்ஹாசனின் இளவயது நண்பராக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சமுத்திரக்கனியின் கெட்டப் இந்த படத்தில் வித்தியாசமாக இருக்கும் என்பதால் அவருக்கு இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. மேலும் சமுத்திரக்கனி இந்த படத்தின் படப்பிடிப்பில் அடுத்த மாதம் கலந்து கொள்வார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. சமுத்திரக்கனியின் புதிய வரவால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

பிக்பாசில் பிசியாக இருக்கும் கமல்ஹாசன் அந்த ஷூட்டிங்கிற்கு 10 நாட்கள் லீவு கொடுத்து விட்டு இந்தியன்2 ஷூட்டிங்கில் இணைய உள்ளாராம்.

312 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன