
சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கு போகும் அஜீத் படம்..!
இந்தியில் அமிதாப் நடிப்பில் வெளியாகி பாராட்டை பெற்ற படம் பிங்க். இந்த படத்தின் தமிழ் ரீமேக் அஜீத் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் வெளியானது.
படத்தில் சொல்லப்பட்ட கருத்து பெண்களுக்கு ஆதரவாக இருந்தது என்று பரவலான பாராட்டையும் சில நெகடிவ் விமர்சனங்களும் கிடைத்தன.
இந்த படம் தமிழகம் முழுதும் வசூல் ரீதியாகவும் லாபமான படமாக மாறியது. ஒரு சில இடங்களில் மட்டுமே கொடுத்த விலையை எட்டிப் பிடிக்காமல் இருந்தது.
இந்த படம் அடுத்து நடிக்கும் படம் என இரண்டு படங்களுக்கும் சேர்த்து அஜீத் சம்பளம் மட்டும் சுமார் 100 கோடியாம். அதிலும் அட்வான்ஸ் மட்டும் பெற்றுக் கொண்டு படம் முடிந்து வியாபாரம் செய்தபின் ரிலீசுக்கு முன் சம்பளத்தை செட்டில் செய்தால் போதும் எனற ஒப்பந்தம் செய்து கொண்டு அஜீத் நடித்திருக்கிறார்.
அஜீத் பாணியைதான் இப்போது தெலுங்கில் சிரஞ்சீவியும் கடைபிடிக்கிறாராம். தெலுங்கில் ரீமேக் ஆக உள்ள நேர் கொண்ட பார்வை படத்துக்கு சிரஞ்சீவிக்கு சுமார் 50 கோடி சம்பளமாம். ஆனால் டோக்கன் அட்வான்ஸ் தொகையாக ஒருசில கோடிகள் மட்டுமே வாங்கிக் கொண்டு படத்தில் நடிக்க சிரஞ்சீவி சம்மதம் சொல்லி இருக்கிறார். அதோடு மீதி சம்பள தொகையை படம் முடிந்து வியாபாரம் செய்த பின் ரிலீசுக்கு முன் கொடுத்தால் போதும் என்று சொல்லி விட்டாராம். சிரஞ்சீவியும் நடிகை ஸ்ரீதேவியும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நட்புக்காக கண்டீஷன்கள் எதையும் போடாமல் போனிகபூர் கேட்ட தேதிகளை கொடுத்திருக்கிறார் சிரஞ்சீவி.
