வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

முதல்முறையாக கமலுடன் இந்தியன்2 படத்தில் இணையும் காமெடியன்..!

 

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ‘இந்தியன் 2’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

ரகுல் ப்ரீத்திசிங், ப்ரியா பவானிசங்கர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.  இம்மாத இறுதியில் கமல்ஹாசன் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் கமல்ஹாசன் முழு அளவில் இந்த படத்தில் நடித்து முடிப்பார்  என்றும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் பிரபல இயக்குனர் நடிகர் சமுத்திரக்கனி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
அவரைத் தொடர்ந்து காமெடி நடிகர் விவேக் முதல் முறையாக கமல்ஹாசன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
கமல்ஹாசன், விவேக் ஏராளமான படங்களில் நடித்தாலும் இருவரும் இணைந்து ஒரு படத்திலும் நடிக்கவில்லை.

அதே நேரம், ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’, ‘அந்நியன்’ மற்றும் ‘சிவாஜி’ ஆகிய படங்களில் விவேக் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் ஒவ்வொரு பிரபலங்களாக இணைந்து வருவது அந்த படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து உள்ளது. பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் லைகா நிறுவனத்துக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

அதே நேரத்தில் ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’, ‘அந்நியன்’ மற்றும் ‘சிவாஜி’ ஆகிய படங்களில் விவேக் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘இந்தியன் 2’ படத்தில் ஒவ்வொரு பிரபலங்களாக இணைந்து வருவது அந்த படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்திற்கு சென்றுள்ளது.

475 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன