செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

ஆவின் பால் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்து படத்தின் பட்ஜெட்டும் மாறும் – ஆதங்கத்தை கொட்டிய “பப்ஜி” இயக்குனர்

 

பால் விலை உயர்ந்தால் விலைவாசி கண்டிப்பாக உயரும். அப்படி விலைவாசி உயர்ந்தால் அன்றாட செலவுகள் கூடி ஏற்கனவே திட்டமிட்ட படத்தின் ஷூட்டிங் பட்ஜெட் அதிகரிக்கும் என்பதை சூசகமாக சொல்லியிருக்கிறார் பிரபல இயக்குனர் விஜய்ஸ்ரீ.

சாருஹாசன் நடிப்பில் தாதா 87 படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ இப்போது அம்சவர்தன் நடிப்பில் பீட்ரு என்ற படத்தையும், பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா, ஜூலியை வைத்து பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg ) எனற படங்களை இயக்கி வருகிறார்.
பப்ஜி படம் தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட் டிசைனில் சமீபத்தில் உயர்த்தப்பட்ட ஆவின் பால் விலை உயர்வையும் “படத்தின் பட்ஜெட்டில் சிறுமாற்றம்” என குறிப்பிட்டு உள்ளார்.

வழக்கமாக பால் விலை உயர்வை அரசு எப்போதெல்லாம் அறிவிக்கிறதோ அதன் தொடர்ச்சியாக  அடிப்படை தேவையான எல்லா பொருட்களின் விலையும் சத்தமில்லாமல் உயர்ந்து விடும்.
இதை கருத்தில் கொண்டே பப்ஜி படம் திட்டமிட்டதை விட பட்ஜெட் தொகை கொஞ்சம் மாற்றம் பெறும் என குறிப்பிட்டு பொது மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

இயக்குனர் விஜய்ஸ்ரீ அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் என்பதால் சுட்டிக்காட்ட வேண்டியதை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

594 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன