வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

தப்பி ஓட முயன்ற தீவிரவாதி போல காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் புகுந்து சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ..!

 

 

தப்பி ஓட முயன்ற தீவிரவாதி போல காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் புகுந்து சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ..!

தலைநகர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் நான் குற்றம் சாட்டப்படவில்லை. ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் என் மீதும்,  என் குடும்பத்தினர் மீதும் எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, ப.சிதம்பரம் தனது வீட்டுக்கு சென்றார். அவருடன் வக்கீல்கள் அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோரும் சென்றனர்.

சிதம்பரம் வீட்டுக்கு சென்றதை அறிந்த சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு கதவு பூட்டப்பட்டிருந்ததால் சிதம்பரம் வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்றனர்.

சினிமாவை மிஞ்சிய பரபரப்பான காட்சிகள் அனைத்தும் ஊடகங்கள் மூலம் உலகம் முழுதும் பார்க்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, ப.சிதம்பரத்தை கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது காரில் அவரை சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வீட்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து கைது செய்யும் அளவுக்கு சிதம்பரம் ஒன்றும் தீவிரவாதி இல்லை இது மோடி அரசின் பழி வாங்கும் செயல் என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

451 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன