வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

கோர்ட்ல வாதாடி ஜெயிச்ச மாதிரி சீப் பப்ளிசிட்டி தேடும் பிகில் படக்குழு – கதை திருட்டு புகார் சொன்ன இயக்குனர் குற்றச்சாட்டு

 

 

கோர்ட்ல வாதாடி ஜெயிச்ச மாதிரி சீப் பப்ளிசிட்டி தேடும் பிகில் படக்குழு – கதை திருட்டு புகார் சொன்ன இயக்குனர் குற்றச்சாட்டு

விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் பிகில் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த கதை பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உள்ளது.

இந்த கதை தன்னுடைய சொந்த கதை என்று உதவி இயக்குனர் செல்வா என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு மேல் நடந்த இந்த வழக்கில் திடீர் திருப்பமாக வழக்கு தொடர்ந்த செல்வா அந்த வழக்கை திரும்ப பெற்றார். இதன் காரணமாக வழக்கு டிஸ்மிஸ் ஆனது.

ஆனால் பட தயாரிப்பு தரப்பில் வெளியான அறிக்கையில் கோர்ட்டில் வாதாடி அதன் காரணமாக வழக்கு டிஸ்மிஸ் ஆனது போல செய்தி தரப்பட்டது.

இது குறித்து வழக்கு தொடர்ந்த செல்வா தன் முகநூல் பக்கத்தில் எழுதி உள்ளதாவது:

அஞ்சு மாசமா சிட்டி சிவில் கோர்ட்ல  கேஸ்  நடந்துட்டு இருக்கு,  நெறய வாக்குவாதம் அதுல பிகில் கதை வேற என்னோட கதை வேறன்னு அவங்க சொல்லல, என்ன மீட் பண்ணலன்னு அவங்க சொல்லல !! அவங்க சொன்னதெல்லாம் “copy right கேஸ் ஐகோர்ட்ல தான் நடக்கணும், அதனால இந்த கேஸ சிட்டி சிவில் கோர்ட்ல டிஸ்மிஸ் பண்ணுங்க” அப்டின்னுதான் மட்டும்தான்  கடந்த அஞ்சு மாசமா அவங்க வக்கீல்  வாதாடுனாங்க, செரி நேரமும் ரொம்ப போயிட்டே இருக்கு ,  அவங்களும்  இவ்ளோ பேசுறாங்கன்னு நான் தான்  நாமளும் ஐகோர்ட்ல  கேஸ பாத்துக்கலாம்ன்னு,  சிட்டி சிவில் கோர்ட்ல withdraw pettition file பண்ண !! அதுக்கு judge அத accept பண்ணி கேஸ டிஸ்மிஸ் பண்ணாங்க !! இன்னும் ஒரு வாரத்துல ஐகோர்ட்ல கேஸ் file பண்ண போற,  ஆனா இதுக்கு நடுவுல  Ags தரப்பு பிரஸ் ரிலீஸ் ஒன்னு  ரிலீஸ் பண்ணிருக்காங்க ,  அதுல உண்மையாவே  எனக்கு என்ன புரியலன்னா நான் widhdraw pettition file பண்ணி  கேஸ் டிஸ்மிஸ் ஆனத,  அவங்க என்னமோ வாதாடி  ஜெயிச்சி கோர்ட்ல டிஸ்மிஸ்  வாங்கினா மாதிரி எதுக்கு சொல்றாங்க !! நீங்க உண்மையா ஜெயிச்சீங்களா இல்லையான்னு உங்க மனசாட்சிக்கு தெரியும் !! நான் கொஞ்சம் நாளா இத பத்தி பேச வேணா அப்டி பேசினா கதையை வெளிய சொல்லவேண்டிய சூழ்நிலை வரும்ன்னு  அமைதியா இருந்த,  இனிமேலும் அமைதியாதான் இருப்ப, ஆனா இப்ப நீங்கதான் என்ன வெச்சி சீப் பப்லிசிட்டி பண்ணிட்டு இருக்கீங்கன்றத மறந்துடாதீங்க  !!
இப்படிக்கு
K. P. செல்வா

என தன் முக நூல் பக்கத்தில் எழுத இப்போ அது வைரலா போகுது.

711 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன