வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

சென்னையில் ஹெலிகப்டர் ஆம்புலன்ஸ் சேவையை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்… லண்டனில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

 

 

இங்கிலாந்தில் செயல்பட்டுவரும் ஆம்புலன்ஸ் சேவையைப் பார்வையிட்ட முதலமைச்சர்…
ஆம்புலன்ஸ் சேவை குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்….

சென்னையில் ஹெலிகப்டர் ஆம்புலன்ஸ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்…
லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சுகாதார மற்றும் வெப்ப மண்டல மருந்து ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட்டார் முதலமைச்சர்…
தமிழகத்தில் மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்த உடன்பாடு…

இங்கிலாந்தில் செயல்படும் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் அவசர காலத்தில் அவை செயல்படும் முறைகள் குறித்து, லண்டன் வாட்டர்லூவில் உள்ள மையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, விவரங்களை கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆம்புலன்ஸ் அவசர சேவை மையத்தையும் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார். அப்போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோரும் உடனிருந்தனர்.

சென்னையில், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். லண்டன் கிங்ஸ் மருத்துவமனையை பார்வையிட்டபின், கிங்ஸ் கல்லூரி அரங்கில், மருத்துவமனை மருத்துவர்களிடையே சற்றுமுன் பேசிய அவர், தமிழகத்தில் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை அமைக்க, தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்தார்.

405 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன