அதி நவீன வசதிகளுடன் தொடங்கிய ரயில் ஆஸ்பத்திரி

70 Views

 

அதி நவீன வசதிகளுடன் தொடங்கிய ரயில் ஆஸ்பத்திரி..!

உலகின் அனைத்து வசதிகளும் கொண்ட முதல் ரயில்  மருத்துவமனை   மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. இந்திய ரயில்வேயின் மைல்கல் என்று கூறப்படும் இந்த ரயிலில் ஏழு கோச்கள் உள்ளன.

கிராமப்புற மக்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே அனைத்துவித மருத்துவ சிகிச்சை பெறும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனை ரயிலில் அறுவை சிகிச்சை செய்யும் வசதி உள்பட ஒரு நவீன மருத்துவமனையில் உள்ள அனைத்து வசதிகளும் உள்ளன.

ஃலைப்லைன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயங்கும் இந்த ரயிலில் இரண்டு ஆபரேசன் தியேட்டர், ஐந்து ஆபரேஷன் டேபிள் உள்பட உலகின் மிக நவீன மருத்துவ வசதிகள் உள்ளன. இந்த ரயில் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் நிற்கும் போது அந்த பகுதியில் உள்ளவர்கள் தங்களுக்கு இருக்கும் நோயிற்கு சிகிச்சை பெறு கொள்ளலாம். கண் பார்வை, காது கோளாறு, பல் சிகிச்சை உள்பட அனைத்து வகை சிகிச்சைகளும் பெற்று கொள்ளலாம். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் நிற்கும்போது சுமார் 8000 பேர் வரை சிகிச்சை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொது மக்களின் வரவேற்பை பொறுத்து ரயில் ஆஸ்பத்திரி மேலும் பல ஊர்களில் வலம் வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − eleven =