வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

பஜாரி ஆகும் ஸ்லிம் இடையழகியும்,  பிக்பாஸ் பிரபலமும்… சர்ச்சையை தேடும் தாதா87 இயக்குனர்..!

 

பஜாரி ஆகும் ஸ்லிம் இடையழகியும்,  பிக்பாஸ் பிரபலமும்… சர்ச்சையை தேடும் தாதா87 இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் கேலி பொருளாக… ஆபாச கதாபாத்திரமாக மட்டுமே காட்டப் பட்ட திருநங்கைகளை முதல் முறையாக மிக நேர்த்தியாக காண்பித்து, அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு என்பதை வெளிப்படுத்திய படம் தாதா87.

இந்த படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ இப்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற பெயரில் பப்ஜி படத்தை ஐஸ்வர்யா தத்தாவை வைத்து தயாரித்து இயக்கி வருகிறார். அதே நேரம் அம்சவர்தன் நடிப்பில் பீட்ரு படத்தையும் இயக்கி வருகிறார்.

வழக்கமாக இவரது படங்களில் தமிழ் சினிமாவில் முன்பு பிரபலமாக இருந்து ஒதுங்கி இருக்கும் பிரபலங்களை  இப்போது தேடி பிடித்து நடிக்க வைப்பார்.

இந்த நிலையில் இப்போது இவரின் நிறுவனம் சார்பில்  அடுத்த தயாரிப்பாக பஜாரி என்ற டைட்டில் வெளியாகி உள்ளது.

மலையாளம், தமிழ் இரு மொழிகளில் இந்த படம் உருவாகிறது.

இதில் யார் பஜாரி என விசாரித்தால் தமிழ் சினிமாவின் ஸ்லிம் இடையழகியாக வலம் வந்த கனவுகன்னியும், சமீபத்திய பிக்பாஸ் பிரபலமும் என இருவரை களம் இறக்குகிறாராம். இதில் பஜாரி யார் என்பது படம் முடியும் போது ரசிகர்களுக்கே புரியுமாம்.

பட டைட்டிலே சர்ச்சையை கிளப்பும் விதத்தில் இருக்கிறதாம்.

ஏற்கனவே சண்டக்காரி என்று ஒரு படம் தயாராகி வருகிறது. பஜாரி என்றாலும், சண்டக்காரி என்றாலும் அர்த்தம் ஒன்றுதான். பார்ப்போம் வெல்லப்போவது பஜாரியா, சண்டக்காரியா…

546 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன