அமேசான் காடுகளை காக்கப் போராடும் வீரர்களை ஊக்குவிக்கும் பிரபல ஓவியர் ஏபி ஸ்ரீதர்

127 Views

 

*அமேசான் காடுகளை காக்கப் போராடும் வீரர்களை ஊக்குவிக்கும் ஓவியர் ஏபி ஸ்ரீதர்*

அமேசான் காடுகள் உலகின் மிக பெரிய காடாக விளங்குகிறது. இந்த காடுகள் கடந்த சில நாட்களாக தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. உலகின் ஒட்டுமொத்த தேவையில் 20 சதவீத ஆக்சிஜன் அமேசான் காடுகளின் மூலம்தான் பெறப்படுகிறது.

காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இந்த காட்டுத்தீ யை கட்டுப்படுத்த ஏராளமான தீயணைப்பு வீரர்கள், இராணுவ விமானங்கள், தன்னார்வலர்கள் மற்றும் லாப நோக்கற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து போராடுகின்றனர்.

இந்நிலையில், பிரபல ஓவியர் ஏ.பி. ஸ்ரீதர் தனது ஓவியங்கள் மூலம், உலகை அழிவில் இருந்து காக்க போராடும் மனிதநேயம் மிக்க வீரர்களை போற்றவும், அவர்களின் தைரியம், துணிச்சல் மற்றும் விடாமுயற்சியை ஊக்குவிக்கும் விதமாக ஓவியங்களை வரைந்துள்ளார்.

The Amazon rainforest, beset by incessant attacks of largely human induced wildfires, now described as one of the biggest environmental crises of the decade, has been an alarming cause for global concern. The lungs of the planet, a mammoth repository of carbon, and an abundant provider of oxygen, acts as an enabler of the smooth functioning of the international ecosystem. In an effort to combat the assault on nature’s most vital force, a substantial number of deployed military troops, volunteers, and non-profit organizations have joined hands together to fight the ongoing effects of the devastating calamity. Artist AP. Shreethar, through his latest series of paintings, seeks to highlight the plight of humanity’s greatest warriors and pay tribute to their honourable courage, bravery, and perseverance at the face of this adversity.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 4 =