மேக்கிங்கில் மிரட்டும் மகாமுனி – கோடங்கி விமர்சனம்

364 Views

 

கல்வி கொடுக்க ஓடும் சாந்த சொரூபி முனியையும்… பணத்துக்கு பக்காவாக திட்டம் தீட்டி ஆளைத் தூக்கும் அதிரடி மகாவையும் பயணிக்க விட்டு கூடவே வழிப் போக்கனாக ரசிகனையும் அழைத்து செல்லும் மெளனகுரு சாந்தகுமாரின் அதிரடி மிரட்டல் தான் ஆர்யாவின் மகாமுனி.

ஞானவேல் ராஜா தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் 8 ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்ட ஒரு புள்ளி இன்றைக்கு இஸ்ரோவின் சந்திராயன்2 கணக்காய் ரசிகர்கள் நெஞ்சில் தடம் பதிக்க களம் இறங்கி இருக்கிறது.

டேய் யார்ரா இவன்… என்னடா இப்படி இருக்கான்னு ஆர்யாவை பிரேமில் பார்க்கும் போதெல்லாம் மண்டைக்குள் குறுகுறுக்கிறது…
கதாபாத்திர நடிப்பு என்பது வேற… காதாபாத்தரமாவே வாழ்க்கை நடத்துறது வேற…
ஆர்யா… நீ நிஜத்துல யார்யா…
யப்பா நல்ல கதை வைச்சிருக்கும் டைரக்டருங்க எல்லாத்துக்கும் சொல்லிக்கிறேன் இந்த ஆர்யா கிட்ட என்னமோ இருக்கு… கிளாமர் கதை, காமெடி கதைன்னு சுரத்தில்லாம போகாம நல்ல நடிப்புக்கு தீனி போடுற கதையோட போங்க ஆர்யாகிட்ட…

மஹிமா… யார்ரா இந்த பொண்ணு… நிஜத்துல பொண்ணுதானா இந்த போடு போடுதுன்னு பாக்குற ஒவ்வொருத்தரும் முக்குமேல விரலு வைப்பாங்க… கிடைக்குற எடத்துல எல்லாம் அடிச்சி ஆடுது… உதாரணம் சொல்லனும்னா சரக்கு பாட்டில புடுங்கி நாலு மடக்கு முழுங்கிட்டு படக்குனு பாட்டில போட்டு ஒடச்சிட்டு ஒடஞ்ச பாட்டில் துண்டுகளை எடுக்க சொல்லும் போது அப்பப்பா… மஹிமா… உன் நடிப்புல குறை எதும் நஹிமா…

இந்துஜா… புருசன் கேப்மாரி காசுக்கு கொலைசெய்ற கொலைகாரன்னு தெரிஞ்சும் எப்படி அவ்ளோ காதல் வருது… வாழ்க்கை நிரந்தரம் இல்லைன்னு தெரிஞ்சும் எப்படியாவது வாழ்ந்துட மாட்டோமான்னு அலைபாயிற கண்ணோட … அசத்தும் இந்துஜா…

மகா ஆர்யாவின் அம்மாவாக ரோஹினி. வெள்ளந்தி வேஷம்… கொஞ்ச நேரம் வந்தாலும் மனசுல நிக்கும் அந்த பாசம்…

சாந்த குமார் கதையில பெருசா மெனக்கெடாவிட்டாலும் வசனங்களில் அங்க அங்க சாட்டைய வீசி இருக்காரு… ஜாதிக்கு எதிரா… அரசுக்கு எதிரா… இந்த கட்சி அந்த கட்சின்னு பேதம் பாக்காம பிரியாணி அண்டாவில ஆரம்பிச்சி மைக் மன்னார்சாமி வரைக்கும் வெளுத்து வாங்கி இருக்காரு…

காளி வெங்கட் ஒரு சீன் வந்தாலும் அப்படியே நச்சுன்னு மனசுல நிக்குறாரு… ஆர்யா முதுகுல குத்தியிருக்கும் கத்திய உருவும் போது ஈரக்கொலை நடுங்குது…

அருண் ஒளிப்பதிவு மகாமுனி பேச முக்கிய பங்கு… அவ்ளோ அழகு… நேர்த்தி… ஒவ்வொரு பிரேமும் தரமான சினிமான்னு தடம் பதிக்குது.

ஜேபி, இளவரசு, அருள்தாஸ் அப்படின்னு எந்த கேரக்டரும் சோடை போகல…

தமன் இசை நம்மையும் படத்தோட பயணிக்க வைக்குது…

நல்ல மேக்கிங்… தரமான இசை… கை தேர்ந்த நடிப்பு… கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவு… சமுதாயத்தை சாடும் வசனங்கள்… ஒரு நேர்க் கோட்டில் பயணிக்க வேண்டிய இரு மனிதர்களின் சேராத முடிவுன்னு பல ஆச்சர்யங்கள் இருந்தாலும் கதையிலும் அதை திரைக்கதையில சொன்ன விதத்திலும் இன்னும் கொஞ்சம் கவனம் சாந்தகுமார் வைத்திருந்தால் மகாமுனி கண்டிப்பாக மெகாமுனிதான்…

இந்த குறையை மேக்கிங்கில் மறந்து பார்த்தாம் உலக சினிமாவுக்கு சவால் விடலாம் மகாமுனி மூலம்..!

– கோடங்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + four =