வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

அஜீத்-வினோத் மீண்டும் இணைந்த பட ஷூட்டிங் தொடங்கியது..!

 

அஜீத்-வினோத் மீண்டும் இணைந்த பட ஷூட்டிங் தொடங்கியது..!

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

அஜித்துடன் இணைந்து போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாகிறார். பைக் மற்றும் கார் ரேஸ் பந்தயங்களை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் இதற்காக தனது கெட்டப்பை மாற்றி இளமையான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி உள்ளது. இதில் அஜீத் போலீஸ் கெட்டப்பில் காக்கி பேண்ட் வெள்ளை டீ சர்ட் ஆணிந்தபடி நிற்கும் காட்சி ஸ்டீவ் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

271 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன