
காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண்..!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன ஐரா, கொலையுதிர் காலம் படங்கள் பெரிதாக வெற்றி பெறாமல் வந்த வேகம் தெரியாமல் திரும்பியதில் அப்செட்டில் இருந்த நயன்தாராவுக்கு சமீபத்திய மலையாள படமான லவ் ஆக்ஷன் டிராமா கொஞ்சம் கை கொடுத்தது.
இப்போது மனம் கவர்ந்த காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் இன்று முதல் தொடங்கி உள்ளது.
படத்துக்கு நெற்றிக்கண் என பேர் வைத்து இருக்கிறார்கள். ஹீரோயினை மையப்படுத்தி உருவாகி உள்ள கதையாம் இது.

494 Views
