வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

தேர்தலில் கால் பதிக்க தனியார் ஏஜென்சியை அழைத்து பேசிய ரஜினிகாந்த்..!

 

விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த ரஜினி இப்போது பிசியாக மும்பையில் நடித்து வருகிறார்.

ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றிய பிறகு அரசியலுக்கான பல்வேறு நடவடிக்கைகளை ரகசியமாக ரஜொனி தரப்பு எடுத்து வருவதாக கூறப்புடுகிறது.

2021ல் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தல் தான் தனது இலக்கு என்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறார்…

அடுத்த வருட இறுதியில் மதுரை அல்லது திருச்சியில் மிகவும் பிரம்மாண்டமான மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார் ரஜினி..

இந்நிலையில், மும்பையில் பிரசாந்த் கிஷோர் என்பவரை சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பு சில மணி நேரங்கள் தொடர்ந்திருக்கிறது..

யார் இந்த பிரசாந்த் கிஷோர்…

அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் , பிரதமர் மோடி ஆட்சி அமைக்கவும், பீஹாரில், முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆட்சி அமைவதற்கும், ஆந்திர சட்டசபை தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெறவும் பல்வேறு பணிகளில், குறிப்பாக மக்களிடம் பிரசார யுக்தியை கொண்டு செல்லும் முக்கிய பணியில் , இந்த பிரசாந்த் கிஷோர் தான் ஈடுபட்டார்.

தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சி தலைவர்கள் அணுகியுள்ளனர். குறிப்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் நடிகர் கமல் ஆகியோர், ஏற்கனவே, பிரசாந்த் கிஷோரிடம் பேச்சு நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களோடு இப்போது ரஜினியும் கிஷோருடன் கை கோர்க்க தயாராகி விட்டார்.

 

 

355 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன