
தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் ஆகும் கார்த்தியின் கைதி..!
கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படம் உருவாகி உள்ளது. படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார்கள்.
அதே தீபாவளி ரேசில் விஜய் நடித்துள்ள பிகில் படமும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தசூழலில் கார்த்தியின் கைதி தீபாவளிக்கு முன்பே அதவது 27ம் தேதிக்கு முன்பே 25ம் தேதி வெள்ளிக்கிழமை அன்றே ரிலீஸ் செய்ய அறிவிப்பு வெளியாகி விட்டது.
வெள்ளி,சனி இரு நாட்கள் வசூலும் அடுத்த நாள் தீபாவளி வசூலும் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கைதி ரிலீஸ் தேதி அறிவிப்பை தொடர்ந்து வேறு வழியின்றி விஜய்யின் பிகில் படமும் தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு வேளை பிகில் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆனால் கைதி வசூலிலும் தனி ஆளாக சக்கை போடு போடும்
ஏற்கனவே கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி உள்ள பிகில் நிலைதான் திரிசங்கு சொர்க்க நிலையில் உள்ளது.
