வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

சென்சாரில் பாராட்டு பெற்ற “கருத்துகளை பதிவு செய்”

 

*சென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு செய்”*

கடந்த வாரம் “கருத்துகளை பதிவு செய்” என்ற திரைப்படம் சென்சாருக்காக அனுப்பப்பட்டது. சமூக வலைதளங்களில் உருவாகும் பொய்யான காதல் பற்றியும், அதன் மூலம் பெண்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதே கதை, அப்படி மாட்டிக்கொண்ட ஒரு அப்பாவி பெண் அதிலிருந்து எப்படி தப்பிக்குறார், அந்த நயவஞ்சக கும்பல்களை என்ன செய்கிறார், என்பதே இந்த “கருத்துகளை பதிவு செய்” திரைப்படம். படத்தை பார்த்த சென்சார் போர்டு தலைமை அதிகாரி இம்மாதிரியான படங்கள் இந்த கால தலைமுறைக்கு அவசியம் என்று சொல்லி பாராட்டி எனக்கு வாழ்த்தி கூறினார் என படத்தின் இயக்குனர் ராகுல் பரஹம்சா தெரிவித்துள்ளார்.


இப்படத்தின் U/A சான்றிதழும் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தின் சமூக வலைதளங்களில் மூலம் உருவாகும் முக்கிய பிரச்சனையை தாக்கி வரும் இப்படத்தின் இணை தயாரிப்பு JSK கோபி
இசை: கணேஷ் ராகவேந்திரா,
பின்னணி இசை: பரணி,
எடிட்டர்: கணேஷ்.டி
ஒளிப்பதிவாளர்: மனோகரன்
இவர்களின் கூட்டணியில் உருவான “கருத்துகளை பதிவு செய்” திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகிறது

264 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன