
மதுக்கடைகளை குறைக்கும் திட்டம், ரேஷன் பொருள்கள் வீடு களுக்கே கொண்டுவரும் திட்டம், விவசாயிகளுக்கு நிதி உதவி, ஆட்டோ – கால்டாக்சி ஓட்டுநர்க ளுக்கு நிதி உதவி, என, பல் வேறு திட்டங்களை அமல் படுத்தியிருக்கிறது ஆந்திர அரசு. ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவி ஏற்ற 100 நாள்களுக்குள் இந்த திட்டங்கள் அமல் படுத்தப் பட்டுள்ளன.
அந்த வகையில், ஆந்திரா வில் அரசு வேலைகளுக் கான ஏ.பி. பி. எஸ்.சி., தேர்வுகளில், நேர்முகத் தேர்வை நீக்க முடி வெடுக்கப் பட்டுள்ளது. 2020ம் ஆண்டு முதல் இந்த திட்டம் நடை முறைப்படுத்தப் படும் என அறிவிக்கப்படுள்ளது. அதன்படி, நேர்முகத் தேர்வுக்கு பதில், தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், பணி நியமனம் வழங்கப்படும். இந்த நிலையில், மருத்துவ மற்றும் சுகா தாரத் துறையின் மறு ஆய்வுக் கூட்டத்தின், ஆந்திரமாநிலம் அமராவதி யில் நேற்று (18ம் தேதி) நடந்தது. அப்போது, சமு தாய மருத்துவமனைகள், பகுதி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள அனைத்து வளர்ச்சி மற்றும் சீரமைப்பு பணி களையும், 2020 டிசம்பருக் குள் முடிக்குமாறு அதிகாரி களுக்கு ஜெகன் மோகன் உத்தரவிட்டார்.
மேலும், சிறுநீரக நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரூ.10,000 நிதி உதவி திட்டத்தை கீழ் தலசீமியா, ஹீமோபிலியா, | சிக்கிள் செல் அ னீமியா உள்ளிட்ட நோயாளிக ளுக்கும் நீட்டிக்குமாறு உத்தரவிட்டார். அதே போல், ”மாநிலத்தின் | தொலைதூர மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் மூலம் மருத்துவ சேவை களை வழங்க வேண்டும்,” | என, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளார்.
