
*பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல நாயகன்*
இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் ‘மங்காத்தா’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய்’, ‘பாலகுமாரா’, ‘ஜீரோ’ உள்ளிட்ட படங்களில் நடித்த அஸ்வின், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி, ”கல்லூரி மாணவனாக ‘ஆயுத எழுத்து’ படத்தின் ஒலி வடிவமைப்பு பணிகள் செய்தேன். தற்போது சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
