
விக்ரமை தந்தையாக நினைக்கிறேன் – மனம் திறந்த பிரபல நடிகை
கிரிசய்யா இயக்கத்தில், துருவ் நடிக்கும் படம், ‘ஆதித்ய வர்மா’. இந்தப் படத்தில், பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய நடிகை பிரியா ஆனந்த், ”நான் ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தில், ஸ்ரீதேவி உடன் நடித்தேன். அவர், என் மீது மிகவும் அன்பு செலுத்தினார். அவரை, என் அம்மாவாகவே உணர்ந்தேன்.
அதேபோல், ‘ஆதித்ய வர்மா’ படத்தில் பணிபுரிந்தபோது, விக்ரமின் பாசத்தை உணர்ந்தேன். அவரை, என் தந்தை போல் நினைக்கிறேன்” என்று கூறினார்.
556 Views
