வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

தயாரிப்பாளர் தனஞ்செயன் இயக்குனர் ஆக அறிமுகமாகும் படம் ஹாலிவுட் ரீமேக்கா..!?

 

தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் தனஞ்செயன். பல படங்களை தயாரித்திருந்த தனஞ்செயன் த்ரில்லர் படம் ஒன்றை இயக்கப்போவதாகவும், அதற்காக பல மாதங்களாக கதை விவாதத்தில் ஈடுபட்டு அழகான திரைக்கதையை உருவாக்கி படத்தையும் பூஜை போட்டு தொடங்கி விட்டார் என சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வந்தது.

இந்த நிலையில் சமூக வலைதளபக்கம் ஒன்றில் தயாரிப்பாளர் தனஞ்செயன் இயக்குனர் ஆக உள்ள படம் ஹாலிவுட் ரீமேக் என பதிவு வெளியாக தமிழ் திரையுலகில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

ஏற்கனவே கதை திருட்டு புகார்களில் தமிழ் திரையுலகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. பலரும் நீதிமன்ற படிகளில் ஏறி இறங்கி வருகிறார்கள்.

இந்த சூழலில் தயாரிப்பாளர் இயக்குநர் ஆகும் படம் ரீமேக் படம் என்ற தகவல் உண்மையா இல்லையா என்பதை சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர் இயக்குனர் தான் சொல்ல முடியும்.
காத்திருப்போம்.

– கோடங்கி

706 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன