திங்கட்கிழமை, மே 20
Shadow

28 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்க வரும் அமலா..!

 

நான் இன்னொரு அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு திரும்பி வந்துள்ளேன்.. அமலா அக்கினேனி.
28 ஆண்டுகளுக்குப் பிறகு ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் தமிழில் திரைப் பயணத்தைத் தொடங்கும் அமலா அக்கினேனியின் செய்தி.

‘மைதிலி என்னை காதலி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி 1980-90 களில் தமிழ் திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை அமலா. ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுடன் இணைந்து இவர் நடித்த படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அவர் நடித்த பல படங்கள் வெற்றி பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றிருக்கிறார்.

1991-ல் ஃபாசில் இயக்கத்தில் ‘கற்பூர முல்லை’ படத்தில் தனி நாயகியாக நடித்திருந்தார். அதன் பின்பு தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை திருமணம் செய்து கொண்டார். பின்பு, ஹைதராபாத் ப்ளூ கிராஸ்-ன் இணை இயக்குனராக இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டிருந்த நடிகை அமலா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்-ன் 18-வது தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சர்வானந்த் நாயகனாக நடிக்க, ரிது வர்மா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் நாசர், சதிஷ், ரமேஷ் திலக் மற்றும் பலரும் நடிக்கிறார்கள். இப்படத்தை ஸ்ரீ கார்த்திக் இயக்குகிறார்.

நட்பு காதல் இடையே உள்ள பிரிக்கமுடியாத உறவை பிரதிபலிக்கிற மாதிரி இருக்கும் என்று படக் குழுவினர் தெரிவித்தனர்.

இப்படத்தில் நடிப்பது குறித்து நடிகை அமலா அக்கினேனி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது :-

ஒரு நடிகர் பல உயிர்களால் ஆசிர்வதிக்கப்படுகிறார். வழக்கமாக ஒரு படம் முடிந்து அடுத்த படத்திற்கு நான் செல்லும்போது, எல்லோரும் கடந்த 2 வாரங்களில் நான் என்ன செய்தேன் என்பது பற்றி எந்த யோசனையும் இல்லாமல் சாதாரணமாக இருக்கிறார்கள். ஆனால், நான் இன்னொரு அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு திரும்பி வந்துள்ளேன் என்று நினைத்துக் கொள்கிறேன். இது பெரிய அதிர்ஷ்டமானது.

இவ்வாறு, அமலா அக்கினேனி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

488 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன