வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

வினியோகிஸ்தர்கள் சங்கத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் டி.ராஜேந்தர்..!

 

 

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தல் டிசம்பர் 22ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் புதிய அணி உருவாகி தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்த புது அணியில் தலைவர் பதவிக்கு இயக்குனர் நடிகர் டி.ராஜேந்தர் , “மன்னன் பிலிம்ஸ்” மன்னன் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். இந்த அறிவிப்பு கூட்டத்தில் கிருஷ்ணன், E.மணி, நாராயணன், சாய், அரவிந்தன், பன்னீர்செல்வம் மற்றும் பல விநியோகிஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

தேர்தல் நடக்கவுள்ள இந்த சங்கத்தில் 500க்கும் மேற்ப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

டி. ராஜேந்தர் – மன்னன் அணியின் தேர்தல் அறிக்கை மற்றும் மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

 

338 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன