சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

வியாபார கல்லா கட்டாத கலக்க மேகங்கள் சூழ்ந்திருக்கும் தனுசு ராசி நேயர்களே…

 

 

காமெடி படமா.. காம நெடி படமா… வியாபார கல்லா கட்டாத கலக்க மேகங்கள் சூழ்ந்திருக்கும் தனுசு ராசி நேயர்களே…

ஆள் உயரத்துக்கு அம்பு இருந்தாலும் வில்லு பல்லு சைஸ்ல இருந்தா வேடிக்கை பாக்கத்தான் தோணும்… வேலைக்காகாதுன்னு ஊர்ல ஒரு பழமொழி இருக்கு…

அந்த மாதிரி டபுள் மீனிங்ல டயலாக் வைச்சி அரை குறை டிரஸ்ல பொண்ணுங்களை ஆடவிட்டு காமெடியா படமெடுத்துட்டா ஓஹோன்னு ஓடிடும்னு யாரோ ஏத்திவிட அத நம்பி படமெடுத்த கம்பெனி படம் முடிஞ்சி பாத்தா அதுல காமெடிக்கு பதில் காம நெடி அதிகமா இருக்க…

அடடா… ஆட்டுவாலு சைஸ்லதான் டபுள் மீனிங் காம நெடி இருக்கும்னு மிச்ச கதையெல்லாம் காமெடியாத்தான் போகும்னு சொல்லித்தான டைரக்டரு சொன்னாரு இப்ப படம் பூரா பச்சையும் நீலமுமா இருக்கேன்னு பதறி போயிட்டாங்க…

காமெடிக்குன்னு அழைக்கலனாலும் இப்ப கோலிவுட் கிரக நிலையில காமெடி யோகம் யோகிபாபுகிட்டதான்… அதனால அவரையும் 2 நாள் புடிச்சிப் போட்டு எதையோ எடுத்து வைக்க… அத வைச்சி வியாபாரம் பேசினாலும் விலை படியல…

அடுத்தவன் காசுல சீட்டு புடிச்சி படிப்படியா வளர்ந்த கோகுலம் நிறுவனம் முத படத்துலயே எதிர்பார்த்த படி வியாபாரம் ஆகம கல்லா காலியானதை பாத்து பதறி இருக்காங்க…

போன வாரம்வரைக்கும் யோகிபாபு போட்டோ போட்டு வெளம்பரம் பண்ணவங்க இப்ப ஹரிஷ் கல்யாண மட்டுமே நம்பி களத்துல நிக்குறாங்க…

இந்த குருப் பெயர்ச்சியில தனுசு ராசிக்கு பெருசா பலன் ஒன்னும் சாதகமா இல்ல… அந்த ராசிக்காரங்களை குஷி படுத்துற மாதிரி எடுத்த தனுசு ராசி நேயர்களே படமும் ராசி செண்டிமெண்ட்ல சிக்கிக்குமா… ரிலீஸ் ஆகட்டும் பாக்கலாம்…

அதனால தான் நா மொதல்லியே சொன்னேன்…
“ஆள் உயரத்துக்கு அம்பு இருந்தாலும் வில்லு பல்லு சைஸ்ல இருந்தா வேடிக்கை பாக்கத்தான் தோணும்… வேலைக்காகாதுன்னு ஊர்ல ஒரு பழமொழி இருக்கு…

இந்த பழமொழி மாதிரி வேடிக்கை பாக்கவாது கூட்டம் வருதான்னு பாக்கலாம்…

– கோடங்கி

539 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன