ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்

 

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்

இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தாமல் இருந்த குண்டுகளை அழிக்க பெரும் நிதி ஒதுக்கப்படுகிறது அதை சுருட்டிக் கொண்டு குண்டுகளை கடலில் வீசிவிட அதில் ஒரு குண்டு கரை ஒதுங்குகிறது.

அதை சாதாரண இரும்பு என்று காயலான் கடையில் போடுகிறார்கள். அங்கிருந்த குண்டு என்ன ஆகிறது கடைசியில் குண்டு வெடித்ததா இல்லையா இதுதான் கதை.

காயலான் கடையில் மர்ம பொருள் வெடித்து பலர் பலி என செய்திகள் வருவதற்கு பின் இப்படியும் ஒரு உண்மை இருக்கலாம் என சொல்கிறது இந்த குண்டு.

அறிமுக இயக்குனர் அதியன் நல்ல லைன் பிடித்திருக்கிறார். அதை மட்டுமே சரியாக கொண்டு போயிருந்தால் மிகப்பெரிய விஷயத்தை பகிரங்கப்படுத்திய பேர் கிடைத்திருக்கும். அதில் தேவை இல்லாமல் கயல் ஆனந்தியின் காதல் அதை வழக்கம் போல எதிர்க்கும் சாதிய கூட்டம் என அந்த காதல் காட்சிகள் எல்லாம் பரியேரும் பெருமாள் பார்க்கிற உணர்வை தருகிறது.
அதை தவிர்த்து நல்ல கதையை மிக தைரியமாக சொல்லியிருக்கிறார்.

அதிலும் குறிப்பாக சமகால பாதுகாப்பு அமைச்சரே ஊழல்வாதி என காட்டும் காட்சிகள் துணிச்சல் ரகம்.
முனீஸ்காந்த காட்சிகள் கலகலப்பானவை. டென்மா இசையும் ரசிக்கும் ரகம்.
அழகான ரித்விகா துணிச்சலான பெண்ணாக வந்து மனதில் நிற்கிறார்.
லிஜீஸ், ஜான்விஜய் , மாரிமுத்து என அவரவர் பங்குகளை சரியாகவே செய்திருக்கிறார்கள்.

நீலம் புரொடக்‌ஷன் தயாரிக்கும் படம் என்றதுமே ஏற்பட்ட பரபரப்பும் எதிர்பார்ப்பும் கொஞ்சமும் குறையாமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அதியன்.

மொத்தத்தில் ஊழல்மிகுந்த அதிகார வர்க்கத்திற்கும், சாதியத்தை தூக்கிப் பிடிக்கும் ஆசாமிகளுக்கும் எப்போது வேண்டுமானாலும் இந்த குண்டு வெடிக்கும் ஜாக்கிரதை என எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்.

– கோடங்கி

327 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன