வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

மூத்த நடிகர் சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது! பிரபல இயக்குனரின் கோரிக்கை நிறைவேறியது !!

 

 

மூத்த நடிகர் சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும் எனற பிரபல இயக்குனரின் கோரிக்கை நிறைவேறியது !

கடந்த ஆண்டு சாருஹாசன் நடிப்பில் வெளியான தாதா 87 படத்தை விஜய்ஸ்ரீஜி இயக்கி இருந்தார்.

இந்த படம் ரசிகர்கள், திரைத்துறையினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. உலகிலேயே அதிக வயதிலும் தொடர்ந்து நடித்து வரும் சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும் என இயக்குனர் விஜய்ஸ்ரீஜி கோரிக்கை விடுத்தார்.

இயக்குனர் விஜயஸ்ரீ ஜி எழுதி, இயக்கிய ‘தாதா 87’ படத்தில் தனது 87வது வயதில், ஒரு அதிரடியான தாதா வேடத்தில் நடித்த சாருஹாசன், இன்றும் தனது 90 வது வயதிலும், திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட்டை விட சில மாதங்களே வயதில் பெரியவர் என்றாலும், உலகிலேயே இன்றும் நடித்து வரும் அதிக வயதுடைய ஒரே கலைஞன் சாருஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 17வது சென்னை சர்வதேச திரைப்படவிழாவின் துவக்க நாளான டிசம்பர் 12 ஆம் தேதி, அவரது கலையுலகப் பங்களிப்பை பாராட்டி, கௌரவிக்கும் விதமாக சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்படுகிறது. பல்வேறு பிராந்திய மொழிகளில் சுமார் 50 படங்களில் நடித்திருக்கும் சாருஹாசன், 1986ல் வெளியான ‘தபாரனா கதே’ திரைப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

453 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன