ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 7
Shadow

பிஜேபி கட்சியில் ஐக்கியம் ஆக ஜீவஜோதி முடிவு..!

 

 

பிஜேபி கட்சியில் ஐக்கியம் ஆக ஜீவஜோதி முடிவு..!

சென்னையில் மிக பிரபலமாக இருக்கும் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கிடைக்கக் காரணமாக இருந்தவர் ஜீவஜோதி. தன் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பல ஆண்டுகளாக கடும் சட்டப் போராட்டங்களை நடத்தி தீர்ப்பு வாங்கியவர்.

ராஜகோபால் மறைவுக்கு பின் இவரைப்பற்றி தகவல் எதுவும் தெரியாமல் இருந்தது. இப்போது இவர் விரைவில் பா.ஜ.க-வில் சேர இருப்பதாகவும் முக்கியப் பதவி கிடைக்க இருப்பதாகவும் தகவல் ஒன்று பரவி உள்ளது.

இதற்கிடையில் பா.ஜ.க-வைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் , ஜீவஜோதியை சந்தித்து பேசியுள்ளனர். இதையடுத்து, சென்னையில் வானதி சீனிவாசனைச் சந்தித்துப் பேசினார் ஜீவஜோதி.

கருப்பு முருகானந்தம் ஒரு வகையில் கணவர் சாந்தகுமார் வழியில் உறவுக்காரர். அதனால் அவர் ஆலோசனைப்படி விரைவில் ஜீவஜோதி பாஜகவில் ஐக்கியமாவார்.
ஏற்கனவே காலியாக உள்ள பாஜக மாநில தலைவர் பதவி மீது கருப்பு முருகானந்தத்திற்கு ஒரு கண் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

969 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன