
நள்ளிரவில் ஒரு இளம்பெண் கொலை. அந்த கொலை வழக்கை விசாரிக்கும் ஒரு போலீஸ் அதிகாரி… முடிவு என்னவாகிறது என்பதுதான் V1 கதை.
லிஜேஸ் காயத்ரி காதல் ஜோடி. கலயாணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசிக்கிறார்கள்.
அதீத காதல் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக மோதலும் இருக்கும் என்பதால் அடிக்கடி இவர்களுக்குள் சண்டை நடக்கிறது. அப்படி ஒரு நாள் வெளியே போன காயத்ரி கொலை ஆகிறார். அவரை கொலை செய்தது யார் என்பதை விசாரிக்கிறது போலீஸ்.
ஒரு சஸ்பென்ஸ் மர்டர் படத்துக்கு உண்டான அத்தனை அம்சங்களும் மிகச்சரியாக அமைந்திருக்கிறது.

லிஜேஷ், காயத்ரி, லிங்கா ஆகியோர் தங்கள் பங்கை மிகச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
ரோனி ரெபேலின் இசையும், கிருஷ்ணசங்கர் டி.எஸ்-ன் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம் சேர்க்கிறது.
திரைக்கதையிலும் வசனங்களிலும் பாவல் நவகீதன் பல இடங்களில் இந்த சமூகத்தையும் சாடி இருக்கிறது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல “எங்க அடி வயத்துல ஏண்டா சாதியை வைக்கிறீங்க” என்கிற கேள்வியை வசனத்தில் வைத்து சாதிவெறியர்களின் செவிட்டில் அறைந்திருக்கிறார் இயக்குனர்.
க்ரைம் சஸ்பென்ஸ் கதையாக பயணப் பட்டாலும் சமூக அவலத்தை மிகச்சரியாக திரைக்கதையில் கலந்திருக்கும் இயக்குனரை பாராட்டலாம்.
மொத்தத்தில் எந்த ஒரு சம்பவத்தையும் மிகச்சரியாக கையாண்டால் நல்ல திரைக்கதை அமைக்க முடியும் என்பதை சொல்லாமல் சொல்கிறது V1 படம்.
– கோடங்கி
