ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 7
Shadow

ரஜினிக்கு பதில் சூர்யா… கமலுக்கு பதில் தனுஷ்… ஸ்ரீபிரியா ஆக மாறப்போகும் நயன்தாரா… மீண்டும் வரப்போகும் அவள் அப்படிதான்!

 

ரஜினிக்கு பதில் சூர்யா…
கமலுக்கு பதில் தனுஷ்…
ஸ்ரீபிரியா ஆக மாறப்போகும் நயன்தாரா…
மீண்டும் வரப்போகும் அவள் அப்படிதான்..!

100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும் திரைப்படங்களில் ஒன்று ‘அவள் அப்படித்தான்’. ருத்ரயா இயக்கத்தில், ரஜினி, கமல், ஸ்ரீபிரியா ஆகியோரது நடிப்பில் 1978 ஆம் ஆண்டு வெளியான இப்படம் காலத்தால் அழியாத கலை பொக்கிஷமாகவே பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் ரீமேக் உரிமையை ருத்ரயாவிடம் ஸ்ரீப்ரியா கேட்ட போது, ரஜினி, கமல் வேடத்தில் யார் நடிப்பாங்கனு, என்று கேட்டவர், உரிமையை தர மறுத்துவிட்டாராம்.

அதே சமயம், ருத்ரயா இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஸ்ரீபிரியாவுக்கு ‘அவள் அப்படித்தான்’ ரீமேக் உரிமையை வழங்கியுள்ளார். அப்போது ‘த்ரிஷ்யம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கிக் கொண்டிருந்ததால், ஸ்ரீபிரியாவால் அவள் அப்படித்தான் படத்தின் ரீமேக்கை எடுக்க முடியவில்லையாம்.

இந்த நிலையில், ‘அவள் அப்படித்தான்’ படத்தை ரீமேக் செய்வது குறித்து ஆலோசித்து வரும் ஸ்ரீபிரியா, கமல் ரோலில் சூர்யாவையும், ரஜினி ரோலில் தனுஷையும், அவர் நடித்த வேடத்தில் நயன்தாராவையும் நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம்.

1,145 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன