
*நடிகர் ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு மறுப்பு*
நடிகர் ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் விசா கோரி ரஜினியிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
சமீபத்தில் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சென்னை வந்து ரஜினியை சந்தித்து பேசிய போது இலங்கை வரும்படி அழைப்பு விடுத்தார். ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க இலங்கை செல்ல திட்டமிட்டபோது ரஜினிக்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து அந்த பயணத்தை ரஜினிகாந்த் தவிர்த்தார். அதன் பின் பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இலங்கை பயணம் குறித்த பரபரப்பு கிளம்பி உள்ளது.
474 Views
