சனிக்கிழமை, ஜூன் 27
Shadow

ரஜினி மீது வழக்கு பதிவு செய்யும் புகார் மனுவை போலீஸ் ஏற்றதால் ரசிகர்கள் அதிர்ச்சி!

 

ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர கோவை போலீசில் புகார் மனு – CSR பதிவு செய்த தமிழ்நாடு போலீஸ்

கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற ஒரு வார இதழ் விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் சில தவறான தகவல்களை கூறியதாகவும், வரலாற்றை திரித்து கூறி தேவையற்ற பரபரப்பை ஏற்படுத்தியதோடு வீண் பழியை சுமத்தி வன்முறையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார் அதனால் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் மீதான புகாரை பெற்றுக் கொண்டதற்கு சான்றாக புகார் மனு ஏற்கப்பட்டதற்கான அத்தாட்சியை போலீசார் வழங்கி உள்ளனர்.

அரசின் அனுமதி இல்லாமல் ரஜினிகாந்த் மீதான புகார் மனு ஏற்கப்பட வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் மீதான புகார் போலீசில் ஏற்கப்பட்டதால் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு அரசியல் வட்டாரத்திலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1,223 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன