திங்கட்கிழமை, மே 4
Shadow

சுமார் 14 லட்சம் பேர் மனு பிப்ரவரி 14ல் இறுதி வாக்காளர் பட்டியல் – தேர்தல் அதிகாரி

 

 

பிப்ரவரி 14 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் – சத்யபிரதா சாஹு

தமிழகம் முழுவதும் ஜனவரி 4,5,11,12 ஆகிய தேதிகளில் 67 ஆயிரத்து 687 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், திருத்தம் செய்ய இதுவரை 17 லட்சத்து 1 ஆயிரத்து 662 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் புதிதாக பெயர் சேர்க்க 13 லட்சத்து 16 ஆயிரத்து 921 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.


இதில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 89 ஆயிரத்து 454 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 439 பேரும் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களும், இதர பணி நாட்களில் பெறப்படும் விண்ணப்பங்களும் நாளை முதல் பரிசீலிக்கப்பட உள்ளது. அதன்பின், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ம் தேதியன்று வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

363 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன