திங்கட்கிழமை, மே 4
Shadow

மலிவான அரசியல் செய்யாமல் ரஜினி வாய் மூடி மவுனமாக இருப்பது நல்லது என்கிறார் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்!

 

 

ரஜினி வாய் மூடி மவுனமாக இருப்பது நல்லது என்கிறார் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்!

துக்ளக் விழா, பெரியார் சர்ச்சைப் பேச்சு, மன்னிப்பு கேட்க ரஜினி மறுப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியது;

நடிகர் ரஜினிகாந்த் சொன்னது போல, 1971-ல் எதுவும் நடக்கவில்லை. துக்ளக் பத்திரிகையில் எழுதிய சோ, நீதிமன்றத்துக்கு சென்று சில அமைப்புகள் எனக்கு கொடுத்த தகவலின் பேரில் தான் எழுதினேன் என்று தெரிவித்தார். எனக்கு அதை பற்றி ஒன்றுமே தெரியாது என்றும் கூறினார்.

நடைபெறாத ஒரு வி‌‌ஷயத்தை நடிகர் ரஜினிகாந்த் சொல்லி மக்களை திசை திருப்புகிறார். நாங்கள் ஏற்றுக்கொண்ட தலைவர்களில் பெரியாரும் ஒருவர். அதனைத் தொடர்ந்து அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரும் எங்கள் தலைவர்கள் ஆவார்கள்.

இந்த 4 பெரும் தலைவர்களின் புகழுக்கு சிறு அளவில் இழுக்கு ஏற்பட்டாலும் கூட அ.தி.மு.க. குரல் கொடுக்கும். எதிர்த்து பேசுபவர்களின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

நடிகர் ரஜினிகாந்த் தேவையில்லாத கருத்தை கூறி இதுபோன்ற சர்ச்சையை உருவாக்க வேண்டாம். அவர் வாயை மூடி மவுனமாக இருப்பது நல்லது. ரஜினிகாந்த் என்ன ஆதாயத்துக்காக இதை சொன்னார் என்று தெரியவில்லை.

மாறான கருத்தை சொல்லி மக்களை திசை திருப்பி மலிவான அரசியல் செய்யக்கூடாது என்று கண்டனம் தெரிவித்து இருக்கிறோம். எங்களை பொறுத்தவரையில் பெரியார் மதிக்கப்பட வேண்டியவர் என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

387 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன