சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

கமல் – ரஜினி இணைந்து நடிக்கும் படத்தை கைதி லோகேஷ் இயக்குகிறார்!

 

 

கமல் – ரஜினி இணைந்து நடிக்கும் படத்தை கைதி லோகேஷ் இயக்குகிறார்!

கமல் , ரஜினி இருவரும் சினிமாவில் தனித்தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தாலும் நட்பு ரீதியாக மிக நெருங்கியே இருக்கிறார்கள்.

அபூர்வ ராகங்கள் படத்தில் இவர்கள் இணைந்து நடித்த பின் பல படங்களில் இணைந்து நடித்தார்கள். அதன் பின் இருவரும் தனித்தனியாக நடித்து வருகிறார்கள்.

மீண்டும் இவர்களை இணைத்து படம் எடுக்க பிரபலமான இயக்குனர்கள் பலர் முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை.

இதற்கிடையில் இருவரும் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்கள். கமல் கட்சி ஆரம்பித்து தேர்தலிலும் நின்றார். ரஜினிகாந்த் விரைவில் வருவேன் என சொல்லி இருக்கிறார்.

இந்த சூழலில் சமீபத்தில் ஹிட் ஆன கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ராஜ்கமல் நிறுவனத்தில் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.
அதே நேரம் ரஜினிகாந்த் அவரை அழைத்து பாராட்டியதும் கோடம்பாக்கம் பரபரப்பானது.

அந்த பரபரப்பு உண்மை எனபதை நிரூபிக்கும் வகையில் கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். அதை லோகேஷ் தான் இயக்க இருக்கிறார் என்பதும் அதில் கமலும் நடிக்கிறார் என்பதுதான் இப்போது கோடம்பாக்கம் ஹாட் டாபிக்.

கமலும், ரஜினியும் இணைந்து நடிப்பதால் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் இன்னும் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.

537 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன